நிதி அமைச்சகம்
மேற்கு ஆசியாவில் நிலவும் மோதல் சூழலைக் கருத்தில் கொண்டு, முக்கியமான பெட்ரோ ரசாயனத் தயாரிப்புகளுக்கான முழுமையான சுங்கவரி விலக்கு, 2026 ஜூலை 15 வரை நீட்டிப்பு
प्रविष्टि तिथि:
30 JUN 2026 5:20PM by PIB Chennai
மேற்கு ஆசியாவில் நிலவும் மோதலால் உலகளாவிய விநியோகச் சங்கிலிகளில் ஏற்பட்டுள்ள இடையூறுகளைக் கருத்தில் கொண்டு, முக்கியமான பெட்ரோ ரசாயனப் பொருட்களின் இறக்குமதிக்கு 2026 ஜூன் 30 வரை அறிவிக்கப்பட்டிருந்த முழுமையான சுங்கவரி விலக்கை ஜூலை 15 வரை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சுங்கவரி விலக்கு தொடர்பான அறிவிப்பு ஒரு தற்காலிக மற்றும் குறிப்பிட்ட நோக்கிலான நிவாரண நடவடிக்கையாகும்.
இந்தக் காலகட்டத்தில் இந்திய பெட்ரோலிய நிறுவனங்கள் எல்பிஜி உற்பத்தியில் கவனம் செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டதால், உள்நாட்டு சந்தையில் பெட்ரோலிய ரசாயனங்கள் போதுமான அளவில் கிடைப்பதை உறுதி செய்வதற்காக இந்த விலக்கு அளிக்கப்பட்டது. நிலைமை படிப்படியாக இயல்பு நிலைக்குத் திரும்பி வருவதால், பாதிக்கப்பட்ட துறைகளுக்கு சுமூகமான மற்றும் தடையற்ற மாற்றத்தை உறுதி செய்வதற்காக, இந்த விலக்கை மேலும் 15 நாட்களுக்கு நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. விலக்கின் கீழ் வரும் பொருட்களின் பட்டியல், ஏற்கனவே அறிவிக்கப்பட்டதைப் போலவே தொடரும்.
இந்தியாவின் உற்பத்தித் துறையை ஆதரிப்பதில் அரசு தொடர்ந்து உறுதியுடன் உள்ளது. முன்பைப் போலவே, இந்த விலக்கு, நெகிழி, பேக்கேஜிங், ஜவுளி, மருந்துகள், ரசாயனங்கள், வாகன உதிரிபாகங்கள் மற்றும் பிற உற்பத்தித் துறைகள் உள்ளிட்ட, பெட்ரோ ரசாயன மூலப்பொருட்கள் மற்றும் இடைநிலைப்பொருட்களைச் சார்ந்திருக்கும் பல்வேறு துறைகளுக்குப் பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது இறுதி நிலைப் பொருட்களைப் பயன்படுத்தும் நுகர்வோருக்கும் நிவாரணம் அளிக்கும்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2279424®=3&lang=1
****
TV/BR/SH
(रिलीज़ आईडी: 2279573)
आगंतुक पटल : 11