ஊரக வளர்ச்சி அமைச்சகம்
தேசிய ஊரக வளர்ச்சி மாநாடு: மத்திய அமைச்சர் திரு சிவராஜ் சிங் சௌகான் பங்கேற்பு
இடுகை இடப்பட்ட நாள்:
29 JUN 2026 5:30PM by PIB Chennai
மத்திய ஊரக வளர்ச்சி அமைச்சகத்தின் சார்பில் புதுதில்லி புசா வளாகத்தில் நடைபெற்ற தேசிய ஊரக வளர்ச்சி மாநாட்டில் மத்திய வேளாண் அமைச்சர் திரு சிவராஜ் சிங் சௌகான் இன்று பங்கேற்றார். இரண்டு நாட்கள் நடைபெற்ற இம்மாநாட்டில் 29 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர்கள், மூத்த அதிகாரிகள் பங்கேற்றனர்.
மாநாட்டில் உரையாற்றிய மத்திய அமைச்சர் திரு சிவராஜ் சிங் சௌகான், கிராமங்களின் முன்னேற்றமே நாட்டின் வளர்ச்சிக்கு அடிப்படையாகும் என்றும், கிராமங்கள் தற்சார்பு அடைவதன் மூலமே வளர்ச்சியடைந்த இந்தியா என்ற இலக்கை எட்ட முடியும் என்றும் குறிப்பிட்டார்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்திற்கு மாற்றாக ‘வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ஊரக வேலைவாய்ப்பு உறுதிச் சட்டம் (விபி-கிராம்-ஜி) என்ற புதிய திட்டம் நாடு முழுவதும் ஜூலை 1 முதல் செயல்படுத்தப்படும் என்று அவர் கூறினார். இத்திட்டத்திற்காக இடைக்காலத் தொகையாக ரூ. 95,682 கோடிக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.
மேலும், கிராமப்புற பெண்களின் பொருளாதாரத் மேம்பாட்டிற்காக 'லட்சாதிபதி பெண்கள் தகவல்பலகை', 'ஷி லீப்ஸ்' ஆகிய புதிய டிஜிட்டல் தளங்களையும் அவர் தொடங்கி வைத்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2279029®=3&lang=1
****
TV/PD/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2279105)
வருகையாளர் எண்ணிக்கை : 66
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Assamese
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam