குடியரசுத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

ராணுவப் பொறியியல் சேவை பயிற்சி அதிகாரிகள் குடியரசுத் தலைவருடன் சந்திப்பு

प्रविष्टि तिथि: 25 JUN 2026 3:59PM by PIB Chennai

ராணுவப் பொறியியல் சேவையின் 2023-2024-ம் ஆண்டு பிரிவுகளைச் சேர்ந்த பயிற்சி அதிகாரிகள்இன்று (ஜூன் 25, 2026) குடியரசுத்தலைவர் மாளிகையில்குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்முவைச் சந்தித்தனர்.

இந்த சந்திப்பின் போது அதிகாரிகளிடையே உரையாற்றிய குடியரசுத்தலைவர்நாட்டின் பாதுகாப்பு உள்கட்டமைப்பின் முதுகெலும்பாக ராணுவப் பொறியியல் சேவை திகழ்கிறது என்று கூறினார். முக்கியத்துவம் வாய்ந்த உத்திசார்ந்த கட்டமைப்புகளை உருவாக்குதல்,  பராமரிப்பதன் மூலம்ஆயுதப் படைகளின் செயல்பாட்டுத் திறனை வலுப்படுத்துவதில்ராணுவப் பொறியியல் சேவைப் பிரிவு முக்கியப் பங்காற்றுவதாகக் கூறினார். பாதுகாப்புப் படை வீரர்கள் (தரைப்படைகடற்படைவிமானப்படை) நாட்டைப் பாதுகாப்பதில் தங்களது  கடமைகளைத் திறம்படவும்செம்மையாகவும் நிறைவேற்றுவதை உறுதி செய்வதில்ராணுவப் பொறியியல் சேவை அதிகாரிகளின் திறன்அர்ப்பணிப்புகடின உழைப்பு ஆகியவை அடிப்படையாக அமைகின்றன என்று அவர் தெரிவித்தார்.

தொழில்முறை நேர்த்திநாணயம்தொழில்நுட்பச் சிறப்புகடமை மீதான அர்ப்பணிப்பு ஆகியவற்றில் மிக உயர்ந்த தரநிலைகளைக் கடைப்பிடிக்குமாறு இளம் அதிகாரிகளுக்கு குடியரசுத்தலைவர் வலியுறுத்தினார். புதுமைகளை ஏற்றுக்கொள்வதுவளர்ந்து வரும் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதுதாங்கள் மேற்கொள்ளும் ஒவ்வொரு திட்டத்திலும் சிறந்து விளங்க பாடுபடுவது ஆகிய பண்புகளை தொடர்ந்து கடைப்பிடிக்குமாறு அவர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

மோதல்கள்புவிசார் அரசியல் பதற்றங்கள் நிறைந்த இன்றைய உலகில்நாடுகளுக்கு 'தற்சார்புஎன்பது முக்கியத் தேவையாக மாறியுள்ளது என்று குடியரசுத்தலைவர் குறிப்பிட்டார். நெருக்கடியான தருணங்களில்பொருளாதார ஸ்திரத்தன்மையைப் பேணவும்முன்னுரிமை அளிக்கப்பட வேண்டிய வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ளவும்தற்சார்பு நிலை  கொண்ட நாடே சிறந்த நிலையில் உள்ளது என்றும்ஆபரேஷன் சிந்தூர்  நடவடிக்கையின் போதுஇது தெளிவாக நிரூபிக்கப்பட்டது என்றும் அவர் தெரிவித்தார்.  உள்நாட்டுப் பாதுகாப்புத் திறன்கள்மேம்பட்ட தொழில்நுட்பம்வலுவான உள்நாட்டுத் தொழில் கட்டமைப்பு ஆகியவை ஒரு நாட்டின் செயல்பாட்டுத் தயார்நிலைஉத்திசார் செயல்திறனை மேம்படுத்துவதில் மிக முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதை இந்த நடவடிக்கை எடுத்துக்காட்டியதாக அவர் கூறினார். 'இந்தியாவில் தயாரிக்கப்பட்டதயாரிப்புகளை ராணுவப் பொறியியல் சேவை ஊக்குவிப்பதையும்பயன்படுத்துவதையும் கண்டு குடியரசுத் தலைவர்  மகிழ்ச்சி தெரிவித்தார்.

தற்போது உலக நாடுகள் பருவநிலை மாற்றம் உள்ளிட்ட பல்வேறு சுற்றுச்சூழல் சவால்களை எதிர்கொண்டு வருவதாக அவர் குறிப்பிட்டார். இத்தகைய சூழலில்நிலையான வளர்ச்சி என்பதுஅவசியமான ஒன்றாக உள்ளது என்றார். பொறியாளர்களாகதிட்டமிடல்கட்டுமானம்பராமரிப்பு ஆகியவற்றில் சுற்றுச்சூழலுக்கு உகந்தநிலையான நடைமுறைகளை ஊக்குவிக்கும் பொறுப்பு ராணுவ பொறியியல் சேவை அதிகாரிகளுக்கு உள்ளது என்று அவர் கூறினார். அவர்களின் முயற்சிகள் வலுவானபாதுகாப்பான இந்தியாவை உருவாக்குவதுடன்தூய்மையானபசுமையான,  நிலையான இந்தியாவை உருவாக்குவதற்கும் பங்களிக்க வேண்டும் என்று குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2277768&reg=3&lang=1

***

SS/SV/SH


(रिलीज़ आईडी: 2277957) आगंतुक पटल : 9
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Gujarati , Malayalam