மாநிலங்களவைச் செயலகம்
azadi ka amrit mahotsav

மாநிலங்களவைக்குப் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுக்கு மாநிலங்களவைத் தலைவர் திரு சி.பி. ராதாகிருஷ்ணன் இன்று பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்

प्रविष्टि तिथि: 25 JUN 2026 4:50PM by PIB Chennai

மாநிலங்களவைக்குப் புதிதாகத் தேர்தெடுக்கப்பட்ட பத்து உறுப்பினர்களுக்கு மாநிலங்களவைத்தலைவர் திரு சி.பி. ராதாகிருஷ்ணன் இன்று பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். திரு பிரவீன் சக்ரவர்த்தி, திரு தேபாஷிஷ் சமந்தராய், திரு சனா சதீஷ் பாபு, திரு விஜய் சிந்தகாயலா, திரு பாஷ்யம் ராமகிருஷ்ணா, திரு லிங்கமனேனி ரமேஷ், திரு ராஜேஷ் பரமானந்த் சுக்லா, திரு பைத்யநாத் ராம், திரு நத்வானி பரிமல், திரு தாய் தாகக் ஆகியோர் மாநிலங்களவை உறுப்பினர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.

இவர்களில் ஐந்து உறுப்பினர்கள் இந்தி மொழியிலும், ஒருவர் ஆங்கிலத்திலும், ஒருவர் தமிழிலும், மூவர் தெலுங்கு மொழியிலும் பதவிப் பிரமாணம் அல்லது உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இவர்களில் நான்கு உறுப்பினர்கள் ஆந்திரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். இருவர் ஜார்க்கண்ட் மாநிலத்தில் இருந்தும், தமிழ்நாடு, குஜராத், அருணாச்சலப் பிரதேசம், ஒடிசா ஆகிய மாநிலங்களிலிருந்து தலா ஒரு உறுப்பினரும் உள்ளனர்.

இந்நிகழ்ச்சியில், மத்திய சட்டம், நீதித்துறை இணையமைச்சர் திரு அர்ஜுன் ராம் மேக்வால், மாநிலங்களையின் சில உறுப்பினர்கள், இதர  முக்கியப் பிரமுகர்கள், மாநிலங்களவை பொதுச் செயலாளர் திரு பி.சி. மோடி, செயலகத்தின் பிற மூத்த அதிகாரிகள் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2277815&reg=3&lang=1

(Release ID:2277815)

****

TV/SV/SH


(रिलीज़ आईडी: 2277938) आगंतुक पटल : 12
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Bengali , Gujarati , Kannada