கூட்டுறவு அமைச்சகம்
தேசிய வேளாண் கூட்டுறவு சந்தை கூட்டமைப்பின் ஏல இணையதளத்தை மத்திய அமைச்சர் திரு அமித் ஷா தொடங்கிவைத்தார்
प्रविष्टि तिथि:
23 JUN 2026 4:41PM by PIB Chennai
தேசிய வேளாண் கூட்டுறவு சந்தை கூட்டமைப்பின் (நாஃபெட்) NAFEX.in என்ற ஏல இணையதளத்தை மத்திய உள்துறை, கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு அமித் ஷா புதுதில்லியில் இன்று தொடங்கிவைத்தார். இந்நிகழ்ச்சியில் மத்திய வேளாண், விவசாயிகள் நலத்துறை அமைச்சர் திரு சிவ்ராஜ் சிங் சௌகான், மத்திய கூட்டுறவுத்துறை இணையமைச்சர் திரு கிரிஷன் பால் குர்ஜா, கூட்டுறவுத்துறை செயலாளர் டாக்டர் அஷீஷ் குமார் பூடானி, நாஃபெட் தலைவர் திரு ஜீதாபாய் அஹிர் உள்ளிட்ட பல்வேறு பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் பேசிய திரு அமித் ஷா, தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைக் கூட்டமைப்பு இன்று NAFEX.in, டிரிஷ்டி, ஈஆர்பி, நாஃபெட் கல்யாண் ஆகிய நான்கு பெரும் முன்முயற்சிகளை தொடங்கியுள்ளதாக கூறினார். NAFEX.in, இதர முன்முயற்சிகள் மிகவும் முக்கியம் என்று அவர் தெரிவித்தார். ஏனென்றால், 2014-ம் ஆண்டு நாஃபெட் மூடப்படும் நிலையில் இருந்தது என்றும், இந்த முயற்சிகளின் காரணமாக, தற்போது நாஃபெட் ரூ.30,000 கோடி வருவாய் ஈட்டுவதாக தெரிவித்தார். அத்துடன் ரூ.500 கோடி லாபத்துடன் நாட்டின் 74 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு சேவை செய்து வருவதாக அவர் கூறினார். நாஃபெட் கடுமையான நிதி நெருக்கடியில் இருந்தபோது, பிரதமர் திரு நரேந்திர மோடி, அதை முழுமையான வெளிப்படைத்தன்மையுடன் நடத்த முடிவு செய்தார் என்று திரு ஷா கூறினார். மத்திய அரசு நிதியுதவி செய்து, நாஃபெட்டை மீண்டும் ஒரு வலுவான அடித்தளத்தில் நிலைநிறுத்தியதாக அவர் கூறினார்.
தற்போது நாஃபெட், உற்பத்தி, கொள்முதல் ஆகிய இரண்டிலும் குறிப்பிடத்தக்க அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது என்று திரு அமித் ஷா கூறினார். பருப்புத் துறையில் நாட்டைத் தன்னிறைவு அடையச் செய்ய, என்சிசிஎஃப், நாஃபெட் ஆகியவை ஒவ்வொரு பருப்பு தானியத்தையும் விவசாயிகளிடமிருந்து நேரடியாகக் கொள்முதல் செய்வதை நோக்கி முன்னேற வேண்டும் என்று அறிவுறுத்தினார். இது விவசாயிகளுக்கு நியாயமான, லாபகரமான விலையை உறுதி செய்யும் என்றும், பருப்பு சாகுபடிப் பரப்பைத் தாமாகவே அதிகரிக்கச் செய்யும் என்றும் திரு அமித் ஷா தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2277046®=3&lang=1
***
SS/IR/LDN/SH
(रिलीज़ आईडी: 2277183)
आगंतुक पटल : 7