சிறுபான்மையினர் நலன் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஹஜ் 2027 கொள்கை அறிவிப்பு: விண்ணப்பங்கள் வரவேற்பு

प्रविष्टि तिथि: 22 JUN 2026 7:20PM by PIB Chennai

மத்திய சிறுபான்மையினர் விவகாரத்துறை அமைச்சகம், ஹஜ் கொள்கை 2027-ஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.  மத்திய சிறுபான்மையினர் விவகாரத்துறை மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் திரு. கிரண் ரிஜிஜு, இக்கொள்கையை வெளியிட்டதுடன், ஹஜ்-2027 பயணத்திற்கான விண்ணப்பங்களை இந்திய ஹஜ் கமிட்டி இன்று முதல் வரவேற்பதாக அறிவித்தார்.

 

 

இந்திய ஹஜ் கமிட்டி மற்றும் 'ஹஜ் சுவிதா'  செயலி மூலம் விண்ணப்பங்களை இன்று முதல் சமர்ப்பிக்கலாம். இம்முறை, ஹஜ் கமிட்டி மற்றும் தனியார் துறைக்கான ஒதுக்கீடு முறையே 70:30 என்ற விகிதத்தில் (1,22,518 மற்றும் 52,507 இடங்கள்) தொடர்கிறது. இருப்பினும், மொத்த ஒதுக்கீட்டை அதிகரிக்க மத்திய அரசு முயற்சித்து வருகிறது.

 

பயணிகளின் வசதிக்காக, மாநில ஹஜ் ஆய்வாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. முந்தைய ஆண்டு காத்திருப்பு பட்டியலில் இருந்தவர்களில் முதல் 20 சதவீதத்தினருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். கோரிக்கையை முன்னிட்டு, கொல்கத்தா புதிய புறப்பாடு இடமாகச் சேர்க்கப்பட்டுள்ளது. மருத்துவ பாதுகாப்பு கருதி, கடுமையான உடல்நலக் குறைபாடு உள்ளவர்கள் பயணம் செய்வதைத் தவிர்க்கும் வகையில் சோதனைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

 

தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் விதமாக, விண்ணப்பங்களைச் சரிபார்ப்பதற்கும், பயணிகளின் குறைகளைக் கேட்டறிவதற்கும் செயற்கை நுண்ணறிவு  வசதி அறிமுகப்படுத்தப்படுகிறது. இந்த ஏஐ உதவி, இந்தி, உருது மற்றும் பிற பிராந்திய மொழிகளில் 24 மணி நேரமும் வழிகாட்டும். சவுதி அரேபியாவின் 'நுசுக்'  தளத்துடன் இதைப் பிணைப்பதன் மூலம், பயணிகளுக்குத் தடையற்ற மற்றும் உண்மையான தகவல்கள் கிடைக்கும். இந்தியப் பயணிகளுக்குப் பாதுகாப்பான மற்றும் கண்ணியமான ஹஜ் பயணத்தை உறுதி செய்ய அரசு உறுதியுடன் உள்ளது. தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் குறிப்பிட்ட காலத்திற்குள் விண்ணப்பிக்குமாறு அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.

 

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2276793&reg=3&lang=1

செய்தி அடையான எண்:2276793

****

TV/VK/SH


(रिलीज़ आईडी: 2276873) आगंतुक पटल : 9
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Malayalam , English , Urdu , Marathi , हिन्दी