கப்பல் போக்குவரத்து அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கப்பல் மறுசுழற்சி செய்வதில் 2025-ல் உலகின் முதன்மை நாடாக இந்தியா மாறியுள்ளது

प्रविष्टि तिथि: 22 JUN 2026 5:54PM by PIB Chennai

கப்பல் மறுசுழற்சி செய்வதில் 2025-ல் உலகின் முதன்மை நாடாக இந்தியா மாறியுள்ளது. உலகளாவிய தரவரிசையில் முதலிடத்தைப் பெற்றுள்ளது. வர்த்தகம் மற்றும் வளர்ச்சிக் குறித்த ஐநா மாநாட்டு அண்மைக்கால அறிக்கையின்படி, உலகளாவிய கப்பல் மறுசுழற்சியில் 2024-ல் 30.1 சதவீதமாக இருந்த இந்தியாவின் பங்கு 2025-ல் 35.4 சதவீதமாக அதிகரித்துள்ளது. எடையளவைப் பொறுத்தவரை 2024-ல் 1.86 மில்லியன் டன்  என்பதிலிருந்து சுமார் 60 சதவீதம் அதிகரித்து 2025-ல் 2.99 மில்லியன் டன் ஆகியுள்ளது. இந்த சாதனையையடுத்து கடல்சார் இந்தியா, தொலைநோக்குப் பார்வை 2030 -க்கு நிர்ணயிக்கப்பட்ட இலக்கை  அதற்கு முன்பாகவே எட்டக்கூடும்.

கடல்சார் கொள்கை சீர்திருத்தங்களின் தாக்கம், பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையில் உள்ள  மத்திய அரசால் மேற்கொள்ளப்படும் வணிகம் செய்வதை எளிதாக்கும் முன்முயற்சிகள் ஆகியவை இந்த சாதனையில்  பிரதிபலிக்கின்றன.

இந்த சாதனைக் குறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து, நீர்வழிப் பாதைகள் துறை அமைச்சர் திரு சர்பானந்த சோனாவால், நீடித்த கொள்கை சீர்திருத்தங்களின் வெற்றி, தொழில்துறை முயற்சிகள், சர்வதேச சுற்றுச்சூழல் மற்றும் பாதுகாப்புத் தரநிலைகளை பின்பற்றுதல் ஆகியவற்றை இது பிரதிபலிக்கிறது என்று கூறியுள்ளார். பொறுப்புமிக்க நீடிக்கவல்ல கப்பல் மறுசுழற்சி என்பதற்கு உலகளாவிய மையம் என்ற இந்தியாவின் நிலையை இது உறுதிபடுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2276739&reg=3&lang=1

****

TV/SMB/KPG/SH


(रिलीज़ आईडी: 2276801) आगंतुक पटल : 13
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Kannada , Malayalam , Assamese , English , Urdu , Marathi , हिन्दी , Gujarati