பிரதமர் அலுவலகம்
பஹத்பூர் கிராமத்தில் உள்ள சந்தாலி ஜஹேரா மற்றும் ஹோ ஜஹேராவில் குடியரசுத்தலைவருடன் பிரதமர் மரியாதை செலுத்தினார்
प्रविष्टि तिथि:
20 JUN 2026 8:51PM by PIB Chennai
குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்முவுடன் இணைந்து பஹத்பூர் கிராமத்தில் உள்ள சந்தாலி ஜஹேரா மற்றும் ஹோ ஜஹேராவில் பிரதமர் திரு நரேந்திர மோடி மரியாதை செலுத்தினார்.
பழங்குடியின சமூகங்கள் போற்றிப் பாதுகாக்கும் ஆழ்ந்த ஆன்மீக மரபுகள் மற்றும் இயற்கையுடனான இணக்கமான உறவு ஆகியவற்றின் அடையாளமாக இந்தப் புனிதமான இடங்கள் திகழ்கின்றன என்று பிரதமர் குறிப்பிட்டார்.
இத்தகைய பழக்கவழக்கங்களும் மரபுகளும் இந்தியாவின் வளமான கலாச்சார பாரம்பரியத்தின் ஒரு ஒருங்கிணைந்த பகுதியாக விளங்குகின்றன என்று திரு மோடி குறிப்பிட்டார்.
எதிர்கால சந்ததியினரின் நலனுக்காக இந்தக் காலத்தால் அழியாத மரபுகளைப் பாதுகாப்பதிலும் ஊக்குவிப்பதிலும் உள்ள உறுதிப்பாட்டைப் பிரதமர் மீண்டும் வலியுறுத்தினார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டதாவது:
“குடியரசுத்தலைவர் அவர்களுடன் இணைந்து, பஹத்பூர் கிராமத்தில் உள்ள சந்தாலி ஜஹேரா மற்றும் ஹோ ஜஹேராவிற்குச் சென்றேன்.
நமது பழங்குடியின சமூகங்கள் போற்றிப் பாதுகாக்கும் ஆழமான ஆன்மீக மரபுகள் மற்றும் இயற்கையுடனான இணக்கமான உறவு ஆகியவற்றின் அடையாளமாகத் திகழும் இந்தப் புனிதமான இடங்களில் மரியாதை செலுத்தினேன். இத்தகைய பழக்கவழக்கங்களும் மரபுகளும் இந்தியாவின் செழுமையான கலாச்சார பாரம்பரியத்தின் ஒருங்கிணைந்த பகுதிகளாகும்.
காலத்தால் அழியாத இந்த மரபுகளை எதிர்கால சந்ததியினரின் நலனுக்காகப் பாதுகாப்பதிலும் ஊக்குவிப்பதிலும் நாங்கள் தொடர்ந்து உறுதி பூண்டுள்ளோம்.
@rashtrapatibhvn”
***
(Release ID: 2275854)
TV/RB/RJ
(रिलीज़ आईडी: 2276394)
आगंतुक पटल : 7
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Kannada
,
Malayalam