மும்பை சர்வதேசத் திரைப்பட விழாவில், இந்தியப் பெண் ஆளுமைகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், அனிமேஷன் தொடரான 'பாரதி அவுர் பிபோ'வின் முதல் காட்சி திரையிடப்பட்டது
தேசிய திரைப்பட வளர்ச்சி கழகம், பப்பெட்டிகா மீடியா தயாரிப்பில், சினேகா ரவிசங்கர் இயக்கத்தில் உருவான இந்தி மொழி அனிமேஷன் தொடரான 'பாரதி அவுர் பிபோ'வின் முதல் காட்சி மும்பை சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. இந்தத் தொடரை அறிமுகம் செய்த ரவிசங்கர், இதற்கான தேசிய திரைப்பட வளர்ச்சி கழகத்தின் முழு ஒத்துழைப்பைக் குறிப்பிட்டு, இது ஒரு குறிப்பிடத்தக்க முயற்சி என்று கூறினார். இந்தியாவின் மாபெரும் பெண் ஆளுமைகளுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, பெண்களின் கதைகள் திருத்தப்படாத வடிவில் வழங்கப்படுகின்றன என்ற ஒரு பொறுப்புத்துறப்புடன் இந்தத் தொடர் தொடங்குகிறது.
இளம் பாரதி, அவளது மாயாஜாலத் தோழியான பிபோவின் கண்ணோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள இக்கதையின் ஒவ்வொரு அத்தியாயமும், ஓட்டுநர்கள், பராமரிப்பாளர்கள், கதக் நடனக் கலைஞர்கள், விவசாயிகள், சீருடைப் பயிற்சியாளர்கள், ஓவியர்கள் என அன்றாடப் பணிகளில் ஈடுபடும் பெண்களைப் போற்றும் ஒரு குழுப்பாடலுடன் தொடங்குகிறது. "நாரி மே தேவி மே, முஜ்சே ஹை சப்குச், முஜ்மே ஹை சப்குச்" என்ற பல்லவி இந்தப் பாடலில் இடம் பெறுகிறது. இந்தப் பன்முகத்தன்மை வாய்ந்த கதைச் சித்தரிப்பு, மகத்தான பெண் ஆளுமைகளின் பிம்பத்தை ஒரே மாதிரியாகச் சித்தரிக்க மறுக்கிறது.
இந்த அனிமேஷன் தொடர், இந்தியாவின் நான்கு பெண் ஆளுமைகளின் வாழ்க்கையை விரிவாக விவரிக்கிறது. அகில்யாபாய் ஹோல்கர், ராணி துர்காவதி, ராணி ரஷ்மோனி, சாலுமரதா திம்மக்கா ஆகிய நான்கு பெண் ஆளுமைகளின் வாழ்க்கை வரலாற்றை எடுத்துரைக்கிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2276035®=3&lang=1
***
TV/SV/RJ
रिलीज़ आईडी:
2276386
| Visitor Counter:
5