19-வது மும்பை சர்வதேச திரைப்பட விழா: பார்வையாளர்களைக் கவர்ந்த புதுப்பிக்கப்பட்ட பழம்பெரும் ஆவணப்படங்கள்
19-வது மும்பை சர்வதேச திரைப்பட விழாவின் போட்டி அல்லாத சிறப்புப் பிரிவில், தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகம்- தேசிய திரைப்பட காப்பகத்தில் (என்எஃப்டிசி-என்எஃப்ஏஐ) இருந்து புதுப்பிக்கப்பட்ட ஐந்து பழம்பெரும் ஆவணப்படங்கள் திரையிடப்பட்டன. மத்திய அரசின் தேசிய திரைப்பட பாரம்பரிய இயக்கத்தின் கீழ் இந்தத் திரைப்படங்கள் டிஜிட்டல் முறையில் அசல் தன்மையுடன் புதுப்பிக்கப்பட்டுள்ளன.
இத்தொகுப்பில் வித்தல்பாய் ஜவேரி இயக்கிய ‘மகாத்மா: காந்தியின் வாழ்க்கை’, என் கே இஸார் இயக்கிய ‘பேகம் அக்தர்’, பிரமோத் பதி இயக்கிய ‘ரவிசங்கர்’ ஆகிய வாழ்க்கை வரலாற்றுப் படங்கள் இடம்பெற்றன. கொல்கத்தா நகரின் வாழ்வியலைக் காட்டும் சிதானந்தா தாஸ்குப்தா இயக்கிய 'போர்ட்ரெய்ட் ஆஃப் எ சிட்டி', நாட்டின் பழங்குடியின மக்களின் கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் ஜகத் முராரி இயக்கிய 'அவர் ஒரிஜினல் இன்ஹாபிடன்ட்ஸ்' ஆகிய ஆவணப்படங்களும் திரையிடப்பட்டன. நாட்டின் கலாச்சார, கலை, சமூக பாரம்பரியத்தை இன்றைய தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்கும் நோக்கில் இவை திரையிடப்பட்டன. நமது ஒலி-ஒளி பாரம்பரியத்தைப் பாதுகாப்பதில் மத்திய அரசின் உறுதிப்பாட்டை இந்தத் திரையிடல் எடுத்துக்காட்டுகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2275081®=3&lang=1
***
TV/PD/SH
रिलीज़ आईडी:
2275371
| Visitor Counter:
5