உள்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மத்திய உள்துறை, கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு அமித் ஷா அமெரிக்க தூதர் திரு செர்ஜியோ கோர்-ஐ புதுதில்லியில் சந்தித்தார்

प्रविष्टि तिथि: 18 JUN 2026 3:15PM by PIB Chennai

மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு  அமித் ஷா அமெரிக்க தூதர் திரு செர்ஜியோ கோர்-ஐ புதுதில்லியில் இன்று சந்தித்தார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் திரு அமித் ஷா கூறியிருப்பதாவது:

“இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் திரு செர்ஜியோ கோர்-ஐ புதுதில்லியில் இன்று சந்தித்தேன். பாதுகாப்புத் துறையில்  குறிப்பாக பயங்கரவாதத்தை எதிர்கொள்வது, போதைப் பொருட்களுக்கு எதிரான நடவடிக்கை ஆகியவற்றில் இந்தியா – அமெரிக்கா இடையேயான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்து விரிவாக விவாதித்தேன்.

பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையின் கீழ், இந்தியா – அமெரிக்கா இடையேயான விரிவான, உலகளாவி உத்திசார் கூட்டாண்மையை மேம்படுத்துவது, இருதரப்பு நட்புறவு மூலம் இருநாட்டு மக்கள் பயன் பெறுவதை உறுதி செய்வது ஆகியவற்றில் இந்தியா உறுதியுடன் இருக்கிறது.”

(Release ID: 2274560) 

****

TV/IR/KPG/SH


(रिलीज़ आईडी: 2274820) आगंतुक पटल : 14
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Bengali-TR , Assamese , Punjabi , Gujarati , Telugu , Malayalam