பிரதமர் அலுவலகம்
பிரான்ஸ் நாட்டின் ஏவியன் நகரில் ஜி7 உச்சிமாநாட்டில் “செயற்கை நுண்ணறிவு பாதுகாப்பாக, விரைவாக திறன்மிக்க முறையில் செயல்படுத்தப்படுவதை உறுதி செய்தல்” குறித்த அமர்வில் பிரதமர் உரையாற்றினார்
प्रविष्टि तिथि:
18 JUN 2026 5:01AM by PIB Chennai
பிரான்ஸ் நாட்டின் ஏவியன் நகரில் ஜி7 உச்சிமாநாட்டில், “செயற்கை நுண்ணறிவு பாதுகாப்பாக, விரைவாக திறன்மிக்க முறையில் செயல்படுத்தப்படுவதை உறுதி செய்தல்” குறித்த அமர்வில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்.
செயற்கை நுண்ணறிவு என்பது மனித நாகரிகத்தின் திசையை மறு வரையறை செய்யும் திறனுடன் கூடிய மாற்றத்தக்க சக்தியாக இருந்தாலும், அது மக்களுக்கு அவசியம் அதிகாரம் அளிக்க வேண்டும் என்று பிரதமர் சுட்டிக்காட்டினார். இந்த பரந்த சிந்தனையின் அடிப்படையில், அண்மையில், செயற்கை நுண்ணறிவு உச்சிமாநாட்டை இந்தியா நடத்தியதாக அவர் விவரித்தார். செயற்கை நுண்ணறிவுக்கான மனிதரை மையமாகக் கொண்ட இந்தியாவின் தொலைநோக்குப் பார்வையை சுட்டிக்காட்டிய அவர், இந்தத் தொழில்நுட்பம் அனைவரையும் உள்ளடக்கிய பாதுகாப்பான பொது நன்மையை விளைவிக்கக் கூடிய கொள்கைகளில் அமைந்திருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
இந்தியா இணையவழியை என்றும் உலகளாவிய பொதுநன்மையாக கருதுவதாகக் குறிப்பிட்ட பிரதமர், ஜனநாயக நாடுகள், தங்களுடைய முக்கிய தகவல் உள்கட்டமைப்பை பாதுகாக்கவும் இணையவழி அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதற்கும் செயற்கை நுண்ணறிவு மாதிரிகளை அவசியம் அணுகவேண்டும் என்று வலியுறுத்தினார்.
பாதுகாப்பான, விரைவான, திறன்மிக்க செயற்கை நுண்ணறிவு மேம்பாட்டிற்கு ஒருங்கிணைந்த அணுகுமுறைக்கு அவர் அழைப்பு விடுத்தார். இது தொடர்பாக அவர் 4 கருத்துக்களை முன்வைத்தார்: செயற்கை நுண்ணறிவு முறை வடிவமைப்பு பாதுகாப்பானதாக இருக்க வேண்டும்: செயற்கை நுண்ணறிவு பயன்பாடு பொதுவான தரநிலைகள், பரிசோதனைக் கட்டமைப்புகள், ஒழுங்கு வழிகாட்டு நெறிமுறைகள் மூலம் அவசியம் அமைய வேண்டும்; மோசடிகள், தவறான தகவல், இணையமோசடி ஆகியவற்றை எதிர்கொள்ள திறன்மிக்க உலகளாவிய ஒத்துழைப்பு இருக்க வேண்டும்; செயற்கை நுண்ணறிவின் பயன்கள், உலக அளவில் சென்றடைய வேண்டும் என்பதை உறுதி செய்யும் வகையில், அது வளரும் நாடுகளை அவசியம் சென்றடைய வேண்டும்.
செயற்கை நுண்ணறிவு, மனித ஆற்றலை விரிவுபடுத்த வேண்டும் என்றும், மனித விருப்பத்திற்கு அதிகாரம் அளிக்க வேண்டும் என்றும், மனித மாண்புகளை பாதுகாக்க வேண்டும் என்றும் கூறிய பிரதமர், இந்த நோக்கங்களை அடைவதற்கு இந்தியா நட்பு நாடுகளுடன் தொடர்ந்து பணியாற்றும் என்று பிரதமர் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2274371®=3&lang=1
***
SS/IR/KPG/SH
(रिलीज़ आईडी: 2274812)
आगंतुक पटल : 6
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam