பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பிரதமரின் வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ், ரூ 2,400 கோடி மதிப்பிலான ஊக்கத்தொகையை பிரதமர் வழங்குகிறார்

இந்த ஊக்கத்தொகை நாடு முழுவதும் 15 லட்சம் பயனாளிகளுக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்க வழிவகுத்துள்ளது

प्रविष्टि तिथि: 17 JUN 2026 3:14PM by PIB Chennai

பிரதமரின் வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ், 19 ஜூன் 2026 அன்று மாலை 5 மணிக்கு புதுதில்லி விஞ்ஞான் பவனில் நடைபெறும் சிறப்பு நிகழ்ச்சியில், பிரதமர் திரு நரேந்திர மோடி ரூ 2,400 கோடி மதிப்பிலான ஊக்கத்தொகையை  வழங்குகிறார்.
வேலைவாய்ப்பு நடவடிக்கைகளை விரைவுபடுத்துதல், முறைப்படுத்துதல், மேம்படுத்துதல், சமூகப் பாதுகாப்புக் கட்டமைப்புகளை விரிவுபடுத்துதல் போன்ற அம்சங்களை நோக்கமாகக் கொண்ட மத்திய அரசின் முன்னோடி வேலைவாய்ப்புத் திட்டத்துடன் கூடிய ஊக்கத்தொகை வழங்கும் திட்டமான பிரதமரின் வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான வேலைவாய்ப்புத் திட்டத்தை செயல்படுத்துவதில், இது முக்கியத்துவம் வாய்ந்த நடவடிக்கையாக உள்ளது. இந்த ஊக்கத்தொகை நாடு முழுவதும் 15 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்க உதவியுள்ளது.
தொழிலாளர்கள், முதலாளிகள் என இரு தரப்பினரையும்  முறை சார்ந்த பொருளாதார நடவடிக்கைகளில் பங்கேற்பதை ஊக்குவிக்கும் வகையில், பிரதமரின் வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான வேலைவாய்ப்புத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், முதல் முறையாக பணிபுரியும் ஊழியர்கள் ரூ 15,000 வரை ஊக்கத்தொகை பெறுவதற்குத் தகுதியுடையவர்கள் ஆவர். கூடுதல் வேலைவாய்ப்பை உருவாக்கும் முதலாளிகள், ஒரு கூடுதல் பணியாளருக்கு மாதந்தோறும் ரூ 3,000 வரை ஊக்கத்தொகைப் பெறத் தகுதியுடையவர்கள். இதன் மூலம் நீடித்த வேலை உருவாக்க நடவடிக்கைகள் ஊக்குவிக்கப்படுகிறது. பொருளாதார வளர்ச்சிக்கு உத்வேகம் அளிக்கும் வகையில், உற்பத்திக்கான உத்திசார் முக்கியத்துவத்தை உணர்ந்து, உற்பத்தித் துறையில் உள்ள முதலாளிகள் நான்கு ஆண்டுகளுக்கு இந்த  ஊக்கத்தொகைப் பெறத் தகுதியுடையவர்கள் ஆவர். இதர அனைத்துத்  துறைகளிலும் உள்ள முதலாளிகள், இரண்டு ஆண்டுகளுக்கு, இந்த  ஊக்கத்தொகையைப் பெற வகை செய்யப்பட்டுள்ளது.
இத்திட்டம், வேலைவாய்ப்பு சார்ந்த வளர்ச்சிக்கான சுற்றுச்சூழல் அமைப்பை ஊக்குவிப்பதில் மத்திய அரசின் உறுதியான நிலைப்பாட்டை பிரதிபலிப்பதாக உள்ளது. இந்தியாவின் பொருளாதார முன்னேற்றத்தின் பலன்கள், இளைஞர்களுக்கு தரமான, முறையான வேலைவாய்ப்புகளாக உருவாக்கப்படுவதை இந்த நடவடிக்கை உறுதி செய்கிறது.
பிரதமரின் வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான வேலைவாய்ப்புத் திட்டம், 2025, ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் அமுலுக்கு வந்தது. மொத்தம் ரூ 99,446 கோடி செலவில், இரண்டு ஆண்டு காலத்தில் 3.5 கோடிக்கும் அதிகமான வேலைவாய்ப்புக்களை உருவாக்குவதற்கு ஊக்கமளிப்பதை இந்த திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. இவர்களில்,1.92 கோடி பயனாளிகள் முதல் முறையாக பணிக்குச் செல்பவர்களாக இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பணியாளர்கள், முதலாளிகள் என இருவருக்கும் ஆதரவு அளிப்பதன் மூலம், முறையான வேலைவாய்ப்பை விரிவுபடுத்துதல், சமூகப் பாதுகாப்பை வலுப்படுத்துதல், வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான தொலைநோக்குப் பார்வையை நனவாக்குதல் ஆகியவற்றில் இத்திட்டம் முக்கிய பங்கு வகிக்கிறது.
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2273997&reg=3&lang=1

(Release ID: 2273997)

***
AD/BR/SH


(रिलीज़ आईडी: 2274243) आगंतुक पटल : 20
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Bengali , English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Assamese , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam