நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

உணவு தானிய சேமிப்பிற்கான நவீன கிடங்கு வசதியை மத்திய அமைச்சர் திரு பிரல்ஹாத் ஜோஷி தொடங்கி வைக்கிறார்

प्रविष्टि तिथि: 17 JUN 2026 2:28PM by PIB Chennai

உணவு தானிய சேமிப்பிற்கான நவீன கிடங்கு வசதியை, 2026 ஜூன் 18 அன்றுபுதுதில்லியில்மத்திய நுகர்வோர் நலத் துறை அமைச்சர் திரு பிரல்ஹாத் ஜோஷி தொடங்கி வைக்கிறார்.

புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் மத்திய உணவுபொது விநியோகத் துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சியில்அத்துறைக்கான இணையமைச்சர் திருமதி நிமுபென் ஜெயந்திபாய் பம்பானியாதிரு பி எல் வர்மா உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

நவீன தொழில்நுட்பம்திறன்வாய்ந்த பொது சேமிப்புக் கிடங்கு உள்கட்டமைப்பு வசதிகளின் மூலம்நாட்டின் உணவுப் பாதுகாப்பிற்கான  கட்டமைப்பை வலுப்படுத்துவதில்மத்திய அரசு தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது. கிடங்கு மேலாண்மை நடைமுறைகளை வலுப்படுத்தவும்உணவு தானிய சேமிப்பு கட்டமைப்பின் செயல்திறனை அதிகரிக்கவும்ஒருங்கிணைந்த தொழில்நுட்பம் சார்ந்த தீர்வாக நவீன கிடங்கு வசதி அறிமுகப்படுத்தப்படுகிறது.

இந்த அமைப்புகிடங்கு செயல்பாடுகளை மேம்படுத்தவும்நிர்வாக வழிமுறைகளை வலுப்படுத்தவும்செயற்கை நுண்ணறிவுஇணையதள பொருட்கள்தானியக்கம்பகுப்பாய்வு உள்ளிட்ட மேம்பட்ட தொழில்நுட்பங்களை உள்ளடக்கியதாக இருக்கும். இந்த அமைப்புநுழைவாயில்எடைப்பாலத்தின் செயல்பாடுகளைத் தானியங்கி முறையில் செயல்படுத்துதல்டிஜிட்டல் அடிப்படையிலான மேலாண்மை நடைமுறைகள்கிடங்கு நிலைகளின் கண்காணிப்புமேம்படுத்தப்பட்ட சரக்கு கையிருப்பை அறியும் முறைஒருங்கிணைந்த தகவல்பலகை மூலம்நிகழ்நேர செயல்பாட்டுக் கண்காணிப்பு ஆகிய அம்சங்களைக் கொண்டிருக்கும். இந்த முயற்சிஉணவு தானிய விநியோக நடைமுறைகளை முழுவதும் டிஜிட்டல் முறையில் நவீனமயமாகுவதில் கவனம் செலுத்தும் வகையில் அமைந்துள்ளது. அண்மை ஆண்டுகளில்கொள்முதல்சேமிப்புவிநியோக அமைப்புகள் முழுவதும் வெளிப்படைத்தன்மைசெயல்பாட்டுத் திறன், சேவை வழங்கலை மேம்படுத்த பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2273959&reg=3&lang=1

***

SS/SV/SH


(रिलीज़ आईडी: 2274204) आगंतुक पटल : 10
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Bengali , Punjabi , Gujarati , Telugu , Kannada , Malayalam