மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்தியா-பிரான்ஸ் ஆழ்தொழில்நுட்பக் கூட்டணியை வலுப்படுத்தும் "பாரத் இன்னோவேட்ஸ் 2026": பிரதமரும், பிரானஸ் அதிபரும் தொடங்கி வைத்தனர்

प्रविष्टि तिथि: 14 JUN 2026 7:00PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடியும், பிரான்ஸ் அதிபர் திரு இம்மானுவேல் மேக்ரோனும் இன்று பிரான்சின் நீஸ் நகரில், பாரத் இன்னோவேட்ஸ் 2026-ன் முதல் பதிப்பை கூட்டாகத் தொடங்கி வைத்தனர். மத்திய கல்வி அமைச்சகத்தின் ஒரு முன்முயற்சியாக இந்திய அரசால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த முக்கிய  நிகழ்வு, இந்தியாவின் ஆழ்தொழில்நுட்பக் கண்டுபிடிப்பாளர்களுக்கும், உலகளாவிய பங்குதாரர்களுக்கும் இடையே புத்தாக்கத்தை அடிப்படையாகக் கொண்ட கூட்டாண்மைகளை மேம்படுத்துவதற்கான ஒரு முதன்மைத் தளமாக விளங்குகிறது.

நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், புத்தாக்கம், தொழில்நுட்பத் துறையில் இந்தியாவின் வளர்ந்து வரும் தலைமைத்துவத்தை வலியுறுத்தினார்.  "இந்தியா மிகப்பெரிய அளவிலும் வேகத்துடனும் புத்தாக்கத்தில் ஈடுபட்டு வருகிறது. நிலையான எதிர்காலத்திற்காகவும், ஒட்டுமொத்த உலகிற்காகவும் இந்தியா புத்தாக்கங்களை மேற்கொள்கிறது. புத்தாக்கம் என்பது இயற்கையாகவே இந்தியாவின் இயல்பில் ஊறிய ஒன்றாகும். 'பாரத் இன்னோவேட்ஸ்' என்பது, உலகளாவிய புத்தாக்கத்தின் அடுத்த அத்தியாயத்தை இந்தியாவுடன் இணைந்து உருவாக்குமாறு உலகிற்கு விடுக்கப்படும் ஓர் அழைப்பாக அமைந்துள்ளது."

இந்தியாவின் துடிப்பான புத்தாக்கச் சூழலைப்  பாராட்டிய அதிபர் திரு இம்மானுவேல் மேக்ரோன், "இந்தியாவிற்கு வெளியே முதன்முறையாக 'பாரத் இன்னோவேட்ஸ் 2026'  நிகழ்வை நடத்துவது, நமது இரு நாடுகளையும் இணைக்கும் உறவுகளின் வலிமைக்கு ஒரு வலுவான சான்றாகும். இந்த உறவுகள், சமீபத்திய ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க மாற்றத்தைச் சந்தித்துள்ள நீண்டகால தொழில்நுட்ப, அறிவியல், தொழில்சார் கூட்டாண்மையை அடிப்படையாகக் கொண்டவையாகும். மேலும், அறிவியல், தொழில்முனைவு, தொழில்சார் வலிமைகளின் மூலம் நமது இரு நாடுகளால் இன்னும் எவ்வளவு தூரம் முன்னேற முடியும் என்பதையும் இவை வெளிப்படுத்துகின்றன", என்று தெரிவித்தார்.

மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் திரு அஜித் தோவல், மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் டாக்டர் அஜய் குமார் சூட் உள்ளிட்டோர் விழாவில் கலந்துகொண்டனர்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2272726&reg=48&lang=1

***

SS/BR/KR

 


(रिलीज़ आईडी: 2273967) आगंतुक पटल : 5
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Telugu , English , Urdu , Marathi , हिन्दी , Assamese , Punjabi , Gujarati , Kannada