ஆயுஷ்
azadi ka amrit mahotsav

நாடு முழுவதும் உள்ள பூங்காக்களில் யோகா மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் –ஆயுஷ் அமைச்சகம்

प्रविष्टि तिथि: 16 JUN 2026 2:29PM by PIB Chennai

இந்தியாவின் சமூகப் பகுதிகள், நகர்ப்புறப் பகுதிகள், பூங்காக்கள் ஆகியவை நீண்ட காலமாக மக்களை ஒன்றிணைப்பதோடு ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஊக்குவிக்கிறது. நகர்ப்புற வாழ்க்கை மேலும் விரைவடைந்து வரும் நிலையில், அந்தப் பொது இடங்கள் உடல்நலன், மனநலன் ஆகியவற்றின் மையங்களாக முக்கியத்துவம் பெறுகின்றன. இதையடுத்து நாட்டில் தற்போதுள்ள பூங்காக்களை அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக யோகா, தியானம் போன்றவற்றை மேற்கொள்ளும்  சமூக நல மையங்களாக மாற்றுவதற்கு யோகா பூங்கா இணையதளத்தை ஆயுஷ் அமைச்சகம் தொடங்கியுள்ளது.

மத்தியப்பிரதேச மாநிலம் கஜூரஹோவில்  நடைபெற்ற சர்வதேச யோகா தினத்திற்கான முன்னோட்ட நிகழச்சியின் போது மத்திய ஆயுஷ் துறை இணையமைச்சர்  திரு பிரதாப் ராவ் ஜாதவ் யோகா பூங்கா இணையதளத்தை தொடங்கி வைத்தார்.

இந்த இணையதளம் மூலம் பஞ்சாயத்து ராஜ் அமைப்புகள், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள், குடியிருப்பாளர் நலச்சங்கங்கள், அரசு சாரா நிறுவனங்கள், பெரு நிறுவனங்கள், இதர நிறுவனங்கள் ஆகியவை யோகா பயிற்சி, தியானம் ஆகியவற்றை ஊக்குவிக்கும் வகையில் தற்போதைய பூங்காக்களை, யோகா பூங்காக்களாக மேம்படுத்த முடியும்.

இந்த முன்முயற்சியின் சிறப்புக் குறித்து எடுத்துரைத்த திரு பிரதாப் ராவ் ஜாதவ், யோகா பூங்காக்கள் ஆரோக்கியமான வாழ்க்கையை ஊக்குவிக்கவும் நாட்டின் நோய்த்தடுப்பு முறையை வலுப்படுத்தவும் நிரந்தர சமூக சொத்துக்களாக இருக்கும் என்று குறிப்பிட்டார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2273510&reg=3&lang=1

***

SS/IR/KPG/KR


(रिलीज़ आईडी: 2273569) आगंतुक पटल : 17
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Khasi , English , Urdu , हिन्दी , Punjabi , Telugu , Kannada , Malayalam