சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
சிறு கிராமங்களில் இருமல் மருந்து விற்பனைக்கான விதிவிலக்கை மத்திய சுகாதாரம், குடும்ப நல அமைச்சகம் திரும்பப் பெற்றுள்ளது
प्रविष्टि तिथि:
16 JUN 2026 11:41AM by PIB Chennai
சிறு கிராமங்களில் இருமல் மருந்து விற்பனைக்கான விலக்கினை மத்திய சுகாதாரம், குடும்ப நல அமைச்சகம் திரும்பப் பெற்றுள்ளது. இதற்காக, மருந்துகள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் சட்டம் 1940-ன் கீழ், குறிப்பிட்ட வகை மருந்துகளுக்காக 1945-ல் உருவாக்கப்பட்ட விதிகள் திருத்தப்பட்டுள்ளன. இந்தத் திருத்தத்திற்கு முன்னர், 1,000-க்கும் குறைவான மக்கள்தொகை கொண்ட கிராமங்களில், சில சில்லறை விற்பனை உரிம விதிகளைப் பின்பற்றாமல் இருமல் மருந்துகளை விற்பனை செய்ய அட்டவணை கே -ன் 13-ம் பிரிவு அனுமதித்தது.
மேற்கூறிய பிரிவிலிருந்து “சிரப்” என்ற சொல் நீக்கப்பட்டதால், இனி சிறிய கிராமங்களில் இருமல் மருந்துகளின் விற்பனையும் விநியோகமும், முறையாக உரிமம் பெற்ற மருந்தகங்கள் மூலமாக மட்டுமே நடைபெற வேண்டும்.
இருமல் மருந்து கலவைகளின் மீதான ஒழுங்குமுறை மேற்பார்வையை வலுப்படுத்தவும், விலக்களிக்கும் கட்டமைப்பை தற்கால பொது சுகாதாரம், பாதுகாப்புத் தேவைகளுடன் சீரமைக்கவும் இந்தத் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை, இருமல் மருந்துகளின் பொறுப்பான விநியோகத்தையும் விற்பனையையும் ஊக்குவிப்பதோடு, நாடு முழுவதும் ஒழுங்குமுறைத் தரநிலைகளுக்கு இணங்குவதையும் உறுதி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய் திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2273373®=3&lang=1
***
SS/SMB/KR
(रिलीज़ आईडी: 2273507)
आगंतुक पटल : 28
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Bengali
,
Malayalam
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Bengali-TR
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada