இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
வளர்ச்சியடைந்த இந்தியா இளையோர் நாடாளுமன்றம் 2026-ஐ மக்களவைத் தலைவர் திரு ஓம் பிர்லா நாளை தொடங்கி வைக்கிறார்
இடுகை இடப்பட்ட நாள்:
15 JUN 2026 2:06PM by PIB Chennai
வளர்ச்சியடைந்த இந்தியா இளையோர் நாடாளுமன்றம் 2026 என்ற நிகழ்வை மத்திய இளைஞர் நலன், விளையாட்டு அமைச்சகம் 2026 ஜூன் 15 முதல் 17 வரை புதுதில்லியில் நடத்துகிறது. மத்திய இளைஞர் நலன், விளையாட்டுத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்ட்வியா தலைமையில் தேசிய அளவில் நடைபெறும் இந்நிகழ்வை மக்களவைத் தலைவர் திரு ஓம் பிர்லா 2026 ஜூன் 16 அன்று தொடங்கி வைக்கிறார்.
இந்த முன்முயற்சி மூலம், இளையோர்களுக்கு நிர்வாகம், கொள்கை விவாதம், நாடாளுமன்ற செயல்பாடுகள் குறித்த புரிதல்கள் ஏற்படுத்தப்படுகிறது.
இந்நிகழ்வு மாவட்டம், மாநிலம், தேசிய அளவில் என்று மூன்று நிலைகளில் நடத்தப்படுகிறது. 757 பல்கலைக்கழகங்கள் / கல்வி நிறுவனங்களில் அவசர நிலையின் 50 ஆண்டுகள்: இந்திய ஜனநாயகத்திற்கான பாடங்கள் குறித்து விரிவான விவாதம் நடைபெற்றன. ஒவ்வொரு மாவட்டத்திலும் முதல் ஐந்து இடம் பிடித்தவர்கள் மாநில அளவிலான சுற்றுகளில் பங்கேற்க வாய்ப்பு பெற்றனர்.
மாநில சட்டப்பேரவைகள், முக்கிய அரசு வளாகங்கள் ஆகியவற்றில் மாநில அளவிலான சுற்றுகள் நடத்தப்பட்டன. மத்திய பட்ஜெட் 2026: இளையோர் சக்தி சார்ந்த பட்ஜெட் தொடர்பான பிராந்திய நிர்வாகக் கட்டமைப்புகள் குறித்து இளைஞர்கள் புரிந்துகொள்ளும் வாய்ப்பை இது வழங்கியது. மாநில அரசின் சட்டப்பேரவை தலைவர்கள், ஆளுநர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த அமர்வு பொது விவாதங்களில் இளையோர் கருத்துக்களின் முக்கியத்துவத்தை உணர்த்தியது.
தேசிய அளவிலான சுற்றுகள் 2026 ஜூன் 15 முதல் 17 வரை நடைபெறுகிறது. மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் சிறப்பாக செயல்பட்ட பிரதிநிதிகள் புதுதில்லியில் நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் பங்கேற்கின்றனர்.
இந்தச் சுற்றில் தொடக்க உரை, கேள்வி நேரம், நாடாளுமன்றத்தை பார்வையிடுதல் உள்ளிட்டவை இடம்பெறும். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான விருது வழங்கும் நிகழ்ச்சி ஜூன் 17 அன்று நடைபெற உள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2272914®=3&lang=1
***
SS/IR/LDN/KR
(வெளியீட்டு அடையாள எண்: 2273054)
வருகையாளர் எண்ணிக்கை : 56