பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நாட்டின் அடுத்த தலைமுறைக்கான பாதுகாப்புத் திறன் சோதனைகளை, பாதுகாப்பு ஆராய்ச்சி, மேம்பாட்டு அமைப்பு வெற்றிகரமாக நடத்தியது

प्रविष्टि तिथि: 13 JUN 2026 7:06AM by PIB Chennai

நாட்டின் பாதுகாப்புத் திறனை வலுப்படுத்தும் வகையில், மேம்பட்டத் தொழில்நுட்பங்களின் செயல்பாடுகள் குறித்த பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் சோதனை வெற்றிகரமாக நடைபெற்றது. நீண்ட தூர ஏவுகணைகளுக்கு எதிரான பன்னடுக்கு  பாதுகாப்பு, நடுத்தர தூரத்தில் உள்ள கப்பல்களைத் தாக்கி அழிக்கும் திறன் ஆகியவற்றை வெளிப்படுத்தும் வகையில், 2026 ஜூன் 10,11 ஆகிய தேதிகளில், தொடர்ந்து மூன்று சோதனைகள் நடத்தப்பட்டன.

பன்னடுக்கு ஏவுகணை பாதுகாப்புத் திறன் சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டது. எதிரிகளின் ஏவுகணைகளை வானிலேயே இடைமறித்து தாக்கி அழிக்கும் ஏவுகணைகள், அதன் இலக்குகளை வெற்றிகரமாகத் தாக்கி அழித்தன. வளர்ந்து வரும் ஏவுகணை சார்ந்த அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் வகையில், அதிநவீன தொழில்நுட்பங்களைக் கொண்டு இந்த அமைப்புகள் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளன.

 

இந்த சோதனைகள், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை எதிர்கொள்ளக்கூடிய ஏவுகணை பாதுகாப்புத் திறனைக் கொண்ட நாடுகளின் பட்டியலில், இந்தியாவை இடம்பெறச் செய்துள்ளன. கடற்படைக்கான நடுத்தர தூர கப்பல் எதிர்ப்பு ஏவுகணையின் முதல் சோதனையும் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. டிஆர்டிஓ, பாதுகாப்புப் படைகளின் மூத்த அதிகாரிகள், இந்தச் சோதனைகளை நேரில் பார்வையிட்டனர்.

அதிநவீன தொழில்நுட்பங்களுடன் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளத் தளவாடங்கள் செயல்திறன் குறித்த சோதனைகள்  வெற்றிகரமாக நடத்தப்பட்டதாக டிஆர்டிஓ விஞ்ஞானிகளை  மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங் பாராட்டியுள்ளார்.

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறையின் செயலாளரும், தலைவருமான திரு. ராஜேஷ் குமார் சிங், இந்தச் சோதனைகளைக் கண்காணித்ததுடன், டிஆர்டிஓ, தொழில் நிறுவனங்களின் கூட்டு முயற்சிக்கும் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

 (Release ID: 2272374)

***

TV/PD/KR


(रिलीज़ आईडी: 2272849) आगंतुक पटल : 15
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Gujarati , Urdu , हिन्दी , Marathi , Bengali , Telugu , Malayalam