மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
‘பாரத் இன்னோவேட்ஸ் 2026’ கண்காட்சி: பிரதமர் திரு நரேந்திர மோடியும் பிரான்ஸ் அதிபர் திரு இம்மானுவேல் மேக்ரானும் இணைந்து தொடங்கி வைக்கின்றனர்
प्रविष्टि तिथि:
12 JUN 2026 6:00PM by PIB Chennai
'பாரத் இன்னோவேட்ஸ் 2026' கண்காட்சியை பிரதமர் திரு. நரேந்திர மோடி பிரான்ஸ் அதிபர் திரு இம்மானுவேல் மேக்ரான் உடன் இணைந்து, 2026 ஜூன் 14 அன்று பிரான்சின் நீஸ் நகரில் வைக்க உள்ளார். மத்திய கல்வி அமைச்சகம் நடத்தும் ‘பாரத் இன்னோவேட்ஸ் 2026’ கண்காட்சி ஜூன் 14 முதல் 16-ம் தேதி வரை நடைபெறுகிறது. உலகளாவிய ஆழ்தொழில்நுட்பம், புத்தாக்கம், கண்டுபிடிப்புகள், புதிய தொழில்முனைவோர் சூழலை மேம்படுத்தும் நோக்கில் இந்த கண்காட்சி நடத்தப்பட உள்ளது.
இந்த முதல் பதிப்பில் 120 இந்தியக் கண்டுபிடிப்பாளர்கள், 15 உயர் கல்வி நிறுவனங்கள், 500 முதலீட்டாளர்கள், உலகளாவிய நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகள் பங்கேற்கின்றனர். மேம்பட்ட கணினித்திறன், செமி கண்டக்டர்கள், விண்வெளித் தொழில்நுட்பம், உயிரித் தொழில்நுட்பம், எரிசக்தி, சுகாதாரம், உற்பத்தி உள்ளிட்ட 13 முக்கியத் துறைகள் இதில் இடம்பெறுகின்றன.
பிரதமருடன், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ் ஜெய்சங்கர், மத்திய வர்த்தக, தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல், மத்திய அரசின் தலைமை அறிவியல் ஆலோசகர் திரு அஜய் குமார் சூட் ஆகியோர் இதில் பங்கேற்கின்றனர்.
இந்தியா-பிரான்ஸ் கண்டுபிடிப்பு ஆண்டின் கீழ் நடத்தப்படும் இந்நிகழ்வு, இரு நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்களுக்கிடையே கூட்டுறவு, தொழில்நுட்பப் பரிமாற்றம், சர்வதேச முதலீடு ஆகியவற்றை அதிகரிக்க வழிவகுக்கும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2272272®=3&lang=1
***
TV/PD/KR
(रिलीज़ आईडी: 2272841)
आगंतुक पटल : 32