'வேவ்ஸ் டாக் பஜார் பரிந்துரைகள்' முன்முயற்சியின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட திரைப்படங்கள், வேவ்ஸ் டாக் பஜார் 2026-ல் காட்சிப்படுத்தப்படும் என என்எஃப்டிசி அறிவிப்பு
இந்த ஆண்டு (2026) நடைபெறவுள்ள 19-வது மும்பை சர்வதேச திரைப்பட விழாவின் ஒரு பகுதியாக நடத்தப்படவுள்ள வேவ்ஸ் டாக் பஜாரின் இரண்டாவது பதிப்பிற்காக, வேவ்ஸ் டாக் பஜார் பரிந்துரைகள் முன்முயற்சியின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட திரைப்படங்களை தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகம் என்எஃப்டிசி (NFDC) அறிவித்துள்ளது.
மும்பை சர்வதேச திரைப்பட விழாவின் சந்தைப் பிரிவு, 2026 ஜூன் 16 முதல் 18 வரை, மும்பையில் உள்ள டாக்டர் கோபால்ராவ் தேஷ்முக் மார்க்கில் அமைந்துள்ள என்எஃப்டிசி தலைமை அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்படுகிறது. இது ஆவணப்படம், குறும்படம், அனிமேஷன் துறையைச் சேர்ந்த திரைப்படத் தயாரிப்பாளர்கள், தயாரிப்பாளர்கள், ஒளிபரப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், விழா அமைப்பாளர்கள், தொழில் வல்லுநர்களை ஒன்றிணைக்கும்.
வேவ்ஸ் டாக்குமெண்ட் பஜார் என்பது, வணிகங்களுக்கு இடையேயான சந்திப்புகள் போன்றவை மூலம் ஒத்துழைப்புகள், சந்தை வாய்ப்புகளை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்ட ஒரு தொழில்சார் தளமாகச் செயல்படுகிறது.
வளர்ந்து வரும் திறமையாளர்களை ஆதரிப்பதற்கும், தாக்கத்தை ஏற்படுத்தும் கதைசொல்லலை ஊக்குவிப்பதற்கும் ஒரு முக்கிய முன்முயற்சியாக, வேவ்ஸ் டாக்குமெண்ட் பஜார் 2026-ல் பங்கேற்கும் மூன்று சிறந்த படத் திட்டங்களுக்கு தலா ₹3 லட்சம் ரொக்க மானியங்களை என்எஃப்டிசி அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த மானியத் திட்டம், சிறப்பான படைப்பு, ஈர்க்கும் கதைக்களம், வலுவான கலைத்திறன், இந்தியாவிலும் சர்வதேச சந்தைகளிலும் பார்வையாளர்களைக் கவரும் ஆற்றல் ஆகியவற்றை வெளிப்படுத்தும் படங்களை அங்கீகரிக்கும்.
மேலும், வேவ்ஸ் டாக் பஜார் ரெக்கமெண்ட்ஸ் வரிசையின் கீழ் 12 திட்டங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. முடிக்கப்பட்ட அல்லது தயாரிப்புக்குப் பிந்தைய பணிகளின் இறுதிக் கட்டத்தில் உள்ள இந்தப் படங்கள், விற்பனை, விநியோகம், திரையிடல் வாய்ப்புகளைத் தேடுகின்றன.
தேர்ந்தெடுக்கப்பட்ட 12 திட்டங்களும், பஜாரின் தொடக்க நாளான 16 ஜூன் 2026 அன்று நடைபெறும் திறந்தநிலை விளக்க அமர்வில் பங்கேற்கும். இந்த அமர்வு, திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு, வாங்குபவர்கள், விநியோகஸ்தர்கள், ஒளிபரப்பாளர்கள், விழாப் பிரதிநிதிகள் உள்ளிட்ட பல்வேறு துறை வல்லுநர்கள் அடங்கிய பார்வையாளர்கள் முன் தங்கள் திட்டங்களை முன்வைக்க ஒரு வாய்ப்பை வழங்கும். மேலும், இது அர்த்தமுள்ள ஒத்துழைப்புகளை உருவாக்கும் அதே வேளையில், தங்கள் திரைப்படங்களின் தனித்துவமான பார்வையை வெளிப்படுத்தவும் உதவும்.
வேவ்ஸ் டாக்குமெண்ட் பஜாரின் இரண்டாவது பதிப்பின் ஒரு முக்கிய சிறப்பம்சம் 'வியூயிங் ரூம்' ஆகும். இது, திரைப்படத் தயாரிப்பாளர்கள் தங்கள் படைப்புகளைத் துறை சார்ந்தவர்களுக்குக் காட்சிப்படுத்த அனுமதிக்கும் ஒரு பிரத்யேக டிஜிட்டல் நூலகத் தளமாகும்.
இந்த ஆண்டு, 'வியூயிங் ரூம்' பிரிவில் 19 நாடுகளில் இருந்து 35 மொழிகளில் 155 படைப்புகள் இடம்பெறும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2272654®=1&lang=1
***
Release ID: 2272654
TV/PLM/RJ
रिलीज़ आईडी:
2272697
| Visitor Counter:
15
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Assamese
,
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Bengali
,
Bengali-TR
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam