ஆயுஷ்
உலகளாவிய இணையவழி யோகா நிகழ்ச்சி
प्रविष्टि तिथि:
13 JUN 2026 8:13PM by PIB Chennai
2026-ஆம் ஆண்டிற்கான சர்வதேச யோகா தினக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, மொரார்ஜி தேசாய் தேசிய யோகா நிறுவனம் மற்றும் 'ஹபில்ட்' உடன் இணைந்து, மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகம்,2026 ஜூன் 14 அன்று ஒரு முக்கிய உலகளாவிய இணையவழி யோகா நிகழ்வை நடத்தவுள்ளது. உலகம் முழுவதிலுமிருந்து யோகா பயிற்சியாளர்கள் மற்றும் நல்வாழ்வு ஆர்வலர்களை ஒரே டிஜிட்டல் தளத்தில் ஒன்றிணைக்கும் இந்த நிகழ்வு, 'யூடியூப் நேரலை யோகா ஒளிபரப்பை அதிக எண்ணிக்கையிலானோர் பார்த்ததற்கான' புதிய உலக சாதனையைப் படைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
ஆயுஷ் அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகளுடன் இணைந்து, மத்திய ஆயுஷ் இணையமைச்சரும் (தனிப்பொறுப்பு) சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சருமான திரு பிரதாப்ராவ் ஜாதவ், இந்த நிகழ்வில் பங்கேற்பார். இந்த யோகா அமர்வு இந்திய நேரப்படி காலை 6:15 மணி முதல் 7:35 மணி வரை நடைபெறும். இதில் 130-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2272553®=48&lang=1
***
TV/RB/RJ
(रिलीज़ आईडी: 2272648)
आगंतुक पटल : 12