மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
செயற்கை நுண்ணறிவு இயக்கத்தின் மூலம் குறைந்த செலவில் தரமான சேவை வழங்கும் வர்யா எனும் வீடியோ கதை உருவாக்க மாதிரி அறிமுகம்
प्रविष्टि तिथि:
12 JUN 2026 3:09PM by PIB Chennai
இந்தியாவின் செயற்கை நுண்ணறிவு இயக்கத்தின் ஆதரவுடன் அவ்தார்.ஏஐ நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட வர்யா வீடியோ உருவாக்கத்திற்கான காலஅவகாசத்தைக் குறைக்கும் வகையில் 50 படிநிலைகளிலிருந்து 4 படிகளாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த மாதிரி வீடியோ உருவாக்கம் பத்து மடங்கு அதிக செயல்திறன் உள்ளதாக உள்ளது.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை மையமாகக் கொண்டு மாற்றத்தை உருவாக்கும் நிறுவனமான அவ்தார் நிறுவனம் வர்யா என்ற செயற்கை நுண்ணறிவு மாதிரியை அறிமுகப்படுத்தியுள்ளது. இது அடுத்த தலைமுறை பயனாளர்களுக்கு அதிநவீன வீடியோ காட்சிகளை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் குறைந்த செலவில் வடிவமைக்க உதவுகிறது.
கல்வி முதல் மின்னணு வர்த்தகம் வரை வர்யா வீடியோ உருவாக்க மாதிரி குறைந்த செலவில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் அடிப்படையிலான வீடியோ உருவாக்கம் சேவையை அனைவருக்கும் கிடைக்க வழிவகுக்கிறது. மேம்பட்ட கட்டளைகள் மூலம், எழுத்தில் வடிவில் உள்ள உரைகளை வீடியோக்களாக மாற்றும் அபார திறனை இது வழங்குகிறது.
புதுதில்லியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் செயலர் திரு எஸ் கிருஷ்ணன், அவ்தார் நிறுவனத்தின் தலைமை நிர்வாக குழுவினர் முன்னிலையில் இந்த மாதிரி வடிவம் அறிமுகம் செய்யப்பட்டது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2272090®=48&lang=1
-----
TV/SV/KPG/RJ
(रिलीज़ आईडी: 2272220)
आगंतुक पटल : 7