விவசாயத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

'எண்ணெய் வித்துக்கள் கிசான் மித்ரா', எண்ணெய் வித்து விவசாயிகளுக்கான இந்தியாவின் நாடு தழுவிய முதல் வாட்ஸ்அப் செயற்கை நுண்ணறிவு ஆலோசனை சேவை

प्रविष्टि तिथि: 11 JUN 2026 5:56PM by PIB Chennai

உள்நாட்டில் எண்ணெய் வித்து உற்பத்தியை அதிகரிக்கவும், சமையல் எண்ணெய் இறக்குமதியைச் சார்ந்திருப்பதைக் குறைக்கவும் இந்தியா காரீப் விதைப்புப் பருவத்தில் அடியெடுத்து வைக்கும் வேளையில், 'எண்ணெய் வித்துக்கள் கிசான் மித்ரா' ஒரு முக்கிய கருவியாக உருவெடுத்துள்ளது. ஹைதராபாத்தில் உள்ள ஐசிஏஆர்-இந்திய எண்ணெய் வித்துக்கள் ஆராய்ச்சி நிறுவனம் உருவாக்கியுள்ள இந்த வாட்ஸ் அப் சார்ந்த செயற்கை நுண்ணறிவு ஆலோசனைச் சேவை, எண்ணெய் வித்து சாகுபடி குறித்த நம்பகமான மற்றும் ஆராய்ச்சி சார்ந்த தகவல்களை, விவசாயிகளின் சொந்த மொழியிலேயே, எந்நேரமும் அவர்களின் அலைபேசிகளுக்கே நேரடியாகக் கொண்டு சேர்க்கிறது.

 

விவசாயிகளுக்கு நேரடிப் பலன் அளிக்கும் வகையில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் ஐசிஏஆர் கொண்டுள்ள உறுதிப்பாட்டை வெளிப்படுத்தும் விதமாக, 2026 பிப்ரவரி 6 அன்று புதுதில்லியில் நடைபெற்ற தேசிய எண்ணெய் வித்துக்கள் மாநாட்டின்போது ஐசிஏஆர்-இன் தலைமை இயக்குநரால் இந்தச்  சேவை தொடங்கி வைக்கப்பட்டது.

விவசாயிகள் +91 4024598180 என்ற எண்ணை வாட்ஸ்அப்பில் ‘Oilseeds Kisaan Mitra’ என்று சேமித்து, நிலக்கடலை, கடுகு, எள், சூரியகாந்தி, சோயாபீன், நைஜர் மற்றும் பிற எண்ணெய் வித்து பயிர்கள் குறித்த கேள்விகளை எந்தவொரு இந்திய மொழியிலும் கேட்டுப் பெறலாம். செயற்கை நுண்ணறிவு  தொழில்நுட்பத்தில் இயங்கும் இந்தச் சாட்பாட், பயிர் ரகத் தேர்வு, பயிர் மேலாண்மை, பூச்சி மற்றும் நோய்த்தடுப்பு, நீர்ப்பாசனம் மற்றும் அறுவடைக்குப் பிந்தைய நடைமுறைகள் குறித்த ஆராய்ச்சி சார்ந்த வழிகாட்டுதல்களை வாரத்தின் 7 நாட்களும், 24 மணி நேரமும் இலவசமாக உடனடியாக வழங்குகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2271749&reg=3&lang=1

***

TV/RB/RJ


(रिलीज़ आईडी: 2272059) आगंतुक पटल : 28
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Kannada , Urdu , English , हिन्दी , Gujarati , Telugu , Malayalam