உள்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மேகாலயாவின் ஷில்லாங்கில் நடைபெற்ற வடகிழக்கு கவுன்சில் கூட்டத்தின் 73-வது முழு அமர்வுக்கு மத்திய அமைச்சர் திரு அமித் ஷா தலைமை தாங்கினார்

प्रविष्टि तिथि: 04 JUN 2026 8:10PM by PIB Chennai

மேகாலயா தலைநகரான ஷில்லாங்கில் நடைபெற்ற வடகிழக்கு கவுன்சில் கூட்டத்தின்  73-வது முழு அமர்வுக்கு மத்திய உள்துறை, கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு அமித் ஷா தலைமை தாங்கினார்.

இக்கூட்டத்தில் வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு ஜோதிராதித்ய சிந்தியா, மேகாலய ஆளுநர் திரு சி.எச். விஜயசங்கர், மேகாலய முதலமைச்சர் திரு கான்ராட் சங்மா, வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டுத் துறைக்கான மத்திய இணை அமைச்சர் திரு சுகந்தா மஜும்தார், மத்திய உள்துறைச் செயலாளர் திரு கோவிந்த் மோகன், வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டுத் துறைச் செயலாளர் திரு சஞ்சய் ஜஜு ஆகியோர் கலந்துகொண்டனர். மேலும், அருணாச்சலப் பிரதேசம், அசாம், மணிப்பூர், திரிபுரா, மிசோரம், நாகாலாந்து, சிக்கிம் ஆகிய மாநிலங்களின் ஆளுநர்கள், முதலமைச்சர்கள், பல முக்கிய பிரமுகர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில் திரு அமித் ஷா, பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், கடந்த 12 ஆண்டுகளில் வடகிழக்கு பிராந்தியத்தின் வளர்ச்சியை விரைவுபடுத்த தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் கூறினார்.

நல்ல சட்டம் - ஒழுங்கு மற்றும் சமூக நல்லிணக்கம் ஆகிய தூண்களின் மீது மட்டுமே வளர்ச்சியின் அடித்தளத்தை அமைக்க முடியும் என்று திரு அமித் ஷா கூறினார். கடந்த 12 ஆண்டுகளில், வடகிழக்கு பிராந்தியத்தில் நிலவிய பல்வேறு மோதல்களைத் தீர்க்க 12-க்கும் மேற்பட்ட அமைதி ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளதாகவும், 10,800-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஆயுதங்களைக் கைவிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2269052&reg=3&lang=1

***

SS/IR/LDN/RJ


(रिलीज़ आईडी: 2272009) आगंतुक पटल : 16
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Khasi , English , Urdu , Marathi , हिन्दी , Assamese , Bengali-TR , Punjabi , Gujarati , Odia