பிரதமர் அலுவலகம்
பாதுகாப்புப் படையினருக்கான விருது வழங்கும் விழாவில் பிரதமர் பங்கேற்பு
இடுகை இடப்பட்ட நாள்:
08 JUN 2026 11:11PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி, பாதுகாப்புப் படை வீரர்களுக்கு விருது வழங்கும் விழாவில் (முதற்கட்டம்) கலந்துகொண்டார். இவ்விழாவில் நமது துணிச்சல் மிக்க வீரர்களுக்கு வீரதீரச்செயல்களுக்கான விருதுகள் வழங்கப்பட்டன.
அவர்களின் அபாரமான துணிச்சல், அர்ப்பணிப்பு, தேசத்திற்கான தன்னலமற்ற சேவை ஆகியவை குறித்துப் பிரதமர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
"நமது துணிச்சல் மிக்க வீரர்களுக்கு 2026-ம் ஆண்டுக்கான வீரதீரச் செயல்களுக்கான விருதுகள் வழங்கப்பட்ட பாதுகாப்புப் படை விருது வழங்கும் விழாவின் முதல் கட்ட நிகழ்ச்சியில் கலந்துகொண்டேன். அவர்களின் அசாத்திய துணிச்சல், அர்ப்பணிப்பு, தேசத்திற்கான தன்னலமற்ற சேவை குறித்து நாம் பெருமிதம் கொள்கிறோம்."
(Release ID: 2270500)
***
TV/PLM/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2270903)
வருகையாளர் எண்ணிக்கை : 77
இந்த வெளியீட்டை படிக்க:
Malayalam
,
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada