கூட்டுறவு அமைச்சகம்
தேசிய கூட்டுறவுக் கொள்கையின் கீழ் தேசிய கொள்கை அமலாக்கம் குறித்த குழுவின் முதல் கூட்டம் புது தில்லியில் நடைபெற்றது
प्रविष्टि तिथि:
09 JUN 2026 5:42PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடியின், கூட்டுறவின் மூலம் வளம் என்ற தொலைநோக்குப் பார்வையின் படியும், மத்திய உள்துறை அமைச்சரும் கூட்டுறவுத் துறை அமைச்சருமான திரு அமித் ஷாவின் வழிகாட்டுதல் படியும், கூட்டுறவுத் துறையை வலுப்படுத்தவும் நவீனமயமாக்கவும் கூட்டுறவு அமைச்சகம் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இது தொடர்பாக, தேசிய கூட்டுறவுக் கொள்கை-2025-ன் கீழ் அமைக்கப்பட்ட தேசிய அளவிலான கொள்கை அமலாக்க, கண்காணிப்புக் குழுவின் முதல் கூட்டம் இன்று (09.06.2026) புது தில்லியில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு, கூட்டுறவு அமைச்சகத்தின் செயலாளரும் குழுவின் தலைவருமான டாக்டர் ஆஷிஷ் குமார் பூட்டானி தலைமை வகித்தார்.
கூட்டுறவு நிறுவனங்களை வலுப்படுத்துதல், டிஜிட்டல் மாற்றம், திறன் மேம்பாடு, உறுப்பினர் விரிவாக்கம், கூட்டுறவு அமைப்புகளின் தலைமையில் அனைவரையும் உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றில் சிறப்பு கவனம் செலுத்தி, தேசிய கூட்டுறவுக் கொள்கையை திறம்பட செயல்படுத்துவதற்கான செயல் திட்டம் குறித்து இக்குழு விவாதித்தது.
பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம், ஊரக வளர்ச்சி அமைச்சகம், மீன்வளத் துறை, பால்வளத் துறை, உணவு பதப்படுத்துதல் தொழில்கள் அமைச்சகம், வேளாண் துறை பிற தொடர்புடைய துறைகள் உள்ளிட்ட பல்வேறு அமைச்சகங்கள், துறைகளுடனும் ஒருங்கிணைந்த செயல் திட்டம் குறித்தும் இக்குழு விவாதித்தது.
மத்திய, மாநில அரசுகள், கூட்டுறவு நிறுவனங்கள், அனைத்துத் தரப்பினரின் தீவிரப் பங்கேற்புடன் கூடிய ஒரு முழுமையான அரசு அணுகுமுறையின் மூலம், தேசிய கூட்டுறவுக் கொள்கை-2025-ன் வெற்றிகரமான செயலாக்கம் உறுதி செய்யப்படும் என்று கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2270792®=3&lang=1
(Release ID : 2270792)
****
TV/PLM/SH
(रिलीज़ आईडी: 2270883)
आगंतुक पटल : 11