பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

குவைத் அமீருடன், பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று பேச்சு நடத்தினார்

இடுகை இடப்பட்ட நாள்: 09 JUN 2026 3:36PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி, குவைத் அமீர் ஷேக் மேஷல் அல் அகமது அல் ஜபார் அல் சபாவுடன் தொலைபேசி வாயிலாக இன்று (09.06.2026) பேச்சு நடத்தினார்.

மேற்காசியாவில் நிலவும் பாதுகாப்பு சூழல் குறித்து இருதலைவர்களும் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனர். குவைத் இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாடு ஆகியவற்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு இந்தியாவின் வலிமையான கண்டனத்தை மீண்டும் உறுதிப்படுத்திய பிரதமர், அங்கு நிலவும் பதற்றம் குறித்து ஆழ்ந்த கவலை தெரிவித்தார்.

அமைதி, ஸ்திரத்தன்மை ஆகியவை விரைவில் நிலவுவதற்கான, உரையாடல், ராஜீய நிலையிலான பேச்சுக்கள் ஆகியவற்றுக்கு பிரதமர் மீண்டும் அழைப்பு விடுத்தார்.

குவைத்தில் வசிக்கும் பெரும் எண்ணிக்கையிலான இந்திய வம்சாவளியினரின் தொடர்ச்சியான நலன், பாதுகாப்புக்கு தனிப்பட்ட கவனம் செலுத்துவதற்காக குவைத் அமீருக்கு பிரதமர் நன்றி தெரிவித்தார்.

***

(Release ID: 2270691

SS/IR/KPG/SH

 


(வெளியீட்டு அடையாள எண்: 2270873) வருகையாளர் எண்ணிக்கை : 44