உள்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மத்திய அமைச்சர் திரு அமித் ஷா, ஜூன் 9-ம் தேதி, சர்வதேச எல்லை துறைமுக மேலாண்மை அமைப்பைத் தொடங்கி வைக்கிறார்

प्रविष्टि तिथि: 07 JUN 2026 6:18PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களின் தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைமையின் கீழ், இந்தியாவின் எல்லைப் பாதுகாப்பும் உள்நாட்டுப் பாதுகாப்பும் புதிய உத்வேகம் பெற்றுள்ளது. இதன் ஒரு பகுதியாக மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா, 2026 ஜூன் 9-ம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று புதுதில்லியில் சர்வதேச எல்லை துறைமுக மேலாண்மை அமைப்பைத் தொடங்கி வைக்கவுள்ளார்.

இந்த முன்முயற்சி, தொழில்நுட்பம் சார்ந்த தீர்வுகள் மூலம் எல்லை தாண்டிய வர்த்தகம், பயணிகள் போக்குவரத்தில் செயல்திறன், வெளிப்படைத்தன்மை, பாதுகாப்பை மேம்படுத்துதல், திறன்மிகு எல்லை நிர்வாகத்தை முன்னெடுப்பது ஆகியவற்றில் அரசின் அர்ப்பணிப்பை எடுத்துக் காட்டுகிறது.

சர்வதேச எல்லை துறைமுகம் (Land Port) என்பது சர்வதேச எல்லைகளில் அமைந்துள்ள ஒரு பகுதி ஆகும். இது அண்டை நாடுகளுடனான வர்த்தகம், சரக்குகள், பயணிகள் பரிமாற்றம் ஆகியவற்றை எளிதாக்குகிறது.

நவீன, தொழில்நுட்பத்தால் இயக்கப்படும் திறன்மிகு நில எல்லை மேலாண்மை அமைப்பின் தொடக்கமானது, திறன்மிகு எல்லை மேலாண்மை அமைப்பை நோக்கிய இந்தியாவின் பயணத்தில் ஒரு மைல்கல் படியாக அமையும்.

சர்வதேச எல்லை துறைமுக மேலாண்மை அமைப்பான எல்பிஎம்எஸ் (LPMS) என்பது தரைவழி வர்த்தக செயல்பாடுகளை ஒருங்கிணைந்த அமைப்பாக ஒன்றிணைக்க வடிவமைக்கப்பட்ட ஒரு அதிநவீன டிஜிட்டல் தளமாகும். இது பல்வேறு தரப்பினரிடையே தடையற்ற ஒருங்கிணைப்பை எளிதாக்கி, அதன் மூலம் தாமதங்களைக் குறைத்து, செயல்பாட்டுத் திறனை மேம்படுத்தும்.

இந்த அமைப்பு, சரக்குகளுக்கான இட ஒதுக்கீடு, பணம் செலுத்துதல், கண்காணித்தல், ஒற்றைச் சாளர அனுமதிகள் உள்ளிட்ட சரக்கு, பயணிகள் செயலாக்கத்திற்கான முழுமையான டிஜிட்டல் அமைப்பை அறிமுகப்படுத்தும்.

உள்துறை அமைச்சகத்தின் எல்லை மேலாண்மைத் துறையின் கீழ் இயங்கும் ஒரு சட்டப்பூர்வ அமைப்பான சர்வதேச எல்லை துறைமுக ஆணையம் (LPAI), வர்த்தகம், இணைப்பு, பிராந்திய ஒத்துழைப்பு ஆகியவற்றை எளிதாக்கும் வகையில் நிலத் துறைமுகங்களை உருவாக்கி நிர்வகிக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ளது. தற்போது, எல்பிஏஐ இந்தியாவின் சர்வதேச எல்லைகளில் 15 சர்வதேச எல்லை துறைமுகங்களை இயக்குகிறது.

மேலும் விவரங்களுக்கு இது ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் :https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2270063&reg=48&lang=1

***

TV/PLM/RJ


(रिलीज़ आईडी: 2270102) आगंतुक पटल : 13
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Gujarati , Kannada , Malayalam