இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

உலக மிதிவண்டி தினக் கொண்டாட்டங்களில் மத்திய அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா பங்கேற்பு

प्रविष्टि तिथि: 07 JUN 2026 4:30PM by PIB Chennai

உலக மிதிவண்டி தினம் புதுதில்லியில் இன்று (07.06.2026) கொண்டாடப்பட்டது. இதில் மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா, பிரபல நடிகர் விக்ராந்த் மாசி, உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் வென்ற குத்துச்சண்டை வீராங்கனை நூபுர் ஷியோரன், பிரபல கன்னட நடிகை ராகினி திவேதி ஆகியோருடன் பங்கேற்றனர். இந்த கொண்டாட்டங்களை ஒட்டி ஜவஹர்லால் நேரு மைதானத்தில் மக்கள் வெள்ளம் திரண்டது.

புதுதில்லியில் 15,000-க்கும் மேற்பட்ட உடற்பயிற்சி ஆர்வலர்கள் மிதிவண்டி ஓட்டியதுடன், கார்கில் - லே முதல் கன்னியாகுமரி வரையிலும், திரிபுரா முதல் வதோதரா வரையிலும் இந்தியா முழுவதும் ஆயிரக்கணக்கான இடங்களில் இன்று நடைபெற்ற மிதிவண்டிப் பயண இயக்கத்தில் 4 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பங்கேற்றனர்.

2024 டிசம்பரில் தொடங்கப்பட்ட ஞாயிற்றுக்கிழமைகளில் மிதிவண்டி ஓட்டும் நிகழ்வு, இந்தியாவில் 30 லட்சத்திற்கும் அதிகமான மக்களின் வாழ்க்கையையும் ஆயிரக்கணக்கான இடங்களையும் சென்றடைந்துள்ளது.

இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் மிதிவண்டி ஓட்டுவதன் நன்மைகள் குறித்துப் பேசிய திரு மன்சுக் மாண்டவியா, உடற் திறன் இந்தியா ஞாயிற்றுக்கிழமைகளில் மிதிவண்டி ஓட்டும் நிகழ்வின் 77-வது வாரம் இன்று நடைபெறுவதாக கூறினார். மிதிவண்டி ஓட்டுவது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, மனரீதியாகவும் ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது என்று அவர் தெரிவித்தார். மேலும், இது எரிபொருளைச் சேமிக்கவும், சூழலைத் தூய்மையாக வைத்திருக்கவும் உதவுகிறது என அவர் கூறினார். அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசல் பிரச்சனைக்கும் இது ஒரு சிறந்த தீர்வாகும் என்று அவர் குறிப்பிட்டார். மிதிவண்டி ஓட்டுவது ஒரே நேரத்தில் பல சவால்களுக்குத் தீர்வாக அமைகிறது என்று அவர் தெரிவித்தார். மக்கள் தவறாமல் மிதிவண்டி ஓட்டி, உடற்திறன் இந்தியா இயக்கத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்று மதிய அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா கேட்டுக் கொண்டார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2270026&reg=48&lang=1

***

TV/PLM/RJ


(रिलीज़ आईडी: 2270049) आगंतुक पटल : 12
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Gujarati , Malayalam