உள்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

திரிபுராவில் எல்லைப் பகுதிகள் தொடர்பான பிரச்சினைகள் குறித்து மத்திய அமைச்சர் திரு அமித் ஷா தலைமையில் ஆய்வுக் கூட்டம்

प्रविष्टि तिथि: 06 JUN 2026 8:17PM by PIB Chennai

மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு அமித் ஷா, திரிபுராவின் எல்லைப் பகுதிகள் தொடர்பான பிரச்சினைகள் குறித்து ஒரு கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார். இந்தக் கூட்டம் திரிபுராவின் சல்பகானில் நடைபெற்றது. இதில், திரிபுரா முதலமைச்சர், தலைமைச் செயலாளர், காவல்துறைத் தலைமை இயக்குனர் மற்றும் மூத்த அதிகாரிகளுடன், திரிபுராவின் 8 எல்லை மாவட்டங்களின் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறைக் கண்காணிப்பாளர்களும் கலந்துகொண்டனர். மாநில அரசின் நிர்வாக அமைப்பை மேலும் ஒருங்கிணைத்து, மேம்பட்ட மற்றும் விரிவான எல்லை மேலாண்மையை மேற்கொள்வதில் இந்தக் கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டது.

கூட்டத்தில் பேசிய உள்துறை அமைச்சர், எல்லைப் பாதுகாப்பு என்பது ஒரு தனிப்பட்ட பொறுப்பு அல்ல, அது ஒரு பிராந்தியப் பொறுப்பு என்று கூறினார். மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறைக் கண்காணிப்பாளர்கள், பட்வாரிகள் (கிராம அளவிலான அரசு அதிகாரிகள்), பஞ்சாயத்துத் தலைவர்கள், நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு முழுமையான பாதுகாப்பு கட்டமைப்பை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.

பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையில், இந்திய அரசு எல்லைப் பாதுகாப்பிற்கு கூடுதல் முன்னுரிமை அளித்து, ஒவ்வொரு எல்லைப் பகுதியையும் வலுப்படுத்தி வருகிறது என்று அமைச்சர் தெரிவித்தார். வெறும் வேலி அமைப்பது மட்டுமின்றி, உள்ளூர் நிர்வாகம், நவீன தொழில்நுட்பம் மற்றும் எல்லைப் பாதுகாப்புப் படை  ஆகியவற்றை உள்ளடக்கிய முழுமையான பிராந்தியப் பாதுகாப்பு, முற்றிலும் பாதுகாப்பான மற்றும் குறைபாடற்ற ஒரு எல்லை வலையமைப்பை உருவாக்கும் என்று திரு அமித் ஷா வலியுறுத்தினார்.

போதைப்பொருள் மற்றும் ஆயுத அச்சுறுத்தல்களைச் சமாளிப்பது குறித்து எல்லைப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்குப் பயிற்சி அளிக்க சிறப்பு முகாம்களை ஏற்பாடு செய்யுமாறு மத்திய உள்துறை அமைச்சர் உத்தரவிட்டார். இந்த முகாம்களில் பட்வாரிகள், உள்ளூர் காவல்துறையினர் மற்றும் எல்லைப் பாதுகாப்புப் படையினர் பங்கேற்பத்தை உறுதி செய்யுமாறும் அவர் அறிவுறுத்தினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2269875&reg=3&lang=1

***

TV/RB/RJ


(रिलीज़ आईडी: 2269970) आगंतुक पटल : 7
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Bengali , Assamese , Gujarati