தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இஎஸ்ஐ காப்பீடுதாரர்களின் குழந்தைகளுக்கான ஒதுக்கீடு அடிப்படையில் 2026-27 கல்வியாண்டில் மருத்துவ இளநிலை, செவிலியர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

प्रविष्टि तिथि: 05 JUN 2026 12:08PM by PIB Chennai

இஎஸ்ஐ காப்பீடுதாரர்களின் குழந்தைகளுக்கான ஒதுக்கீடு அடிப்படையில் 2026-27 கல்வியாண்டில் மருத்துவ இளநிலை, செவிலியர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை மத்திய தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகம் (இஎஸ்ஐசி)  வரவேற்றுள்ளது.

இந்தக் கல்வியாண்டில் காப்பீடு பெற்றவர்களின் குழந்தைகளுக்கு 783 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இவற்றில் 695 எம்பிபிஎஸ் இடங்கள், 28 பிடிஎஸ் இடங்கள், 60 பிஎஸ்சி செவிலியர் படிப்புக்கான இடங்கள் ஆகும். தொழிலாளர் குடும்பங்களின் கல்வி விருப்பங்களுக்கு உதவி செய்யும் நோக்கத்துடன் இந்த முன்னோடித் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த ஒதுக்கீட்டில் சேர்க்கப்படும் மாணவர்களுக்கு எம்பிபிஎஸ், பிடிஎஸ்  படிப்புகளுக்கு ஆண்டுக் கல்விக் கட்டணம் ரூ.24,000 ஆகவும், செவிலியர் பயிற்சி வகுப்புகளுக்கு ஆண்டுக் கல்விக் கட்டணம் ரூ.10,000 ஆகவும் இருக்கும்.

ஆண் விண்ணப்பதாரர்களின் வயது 08.03.2026 நிலவரப்படி 21 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். தொழிலாளர்களைச் சார்ந்துள்ள திருமணமாகாத பெண்களுக்கு வயது கட்டுப்பாடு இல்லை. இணையதளம் வாயிலாக விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க 2026 ஜூன்    21 கடைசி நாளாகும்.

ஓடிபி அடிப்படையில் உறுதி செய்தல் நடைமுறை இருப்பதால் காப்பீடுதாரர்களின் செல்பேசி எண் இஎஸ்ஐசி தரவுத் தளத்தில் சரியாக இருப்பதை விண்ணப்பதாரர்கள் உறுதி செய்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

கல்வி தகுதி, விண்ணப்ப நடைமுறைகள், மாணவர் சேர்க்கை தொடர்பான தகவல்கள் ஆகியவற்றை விரிவாக அறிந்து கொள்ள www.esic.gov.in  என்ற இஎஸ்ஐசி  இணையதளத்தை அணுகலாம்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2269192&reg=3&lang=1

***

SS/SMB/KPG/SH


(रिलीज़ आईडी: 2269532) आगंतुक पटल : 13
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Bengali , Telugu , English , Gujarati , Urdu , Marathi , हिन्दी , Bengali-TR , Malayalam