பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்
பிரதமரின் தேசிய பாலர் விருதுகள் 2026-க்கான பரிந்துரை விண்ணப்பங்கள் வரவேற்பு: இறுதி நாள் ஜூலை 31, 2026
प्रविष्टि तिथि:
02 JUN 2026 3:51PM by PIB Chennai
பல்வேறு துறைகளில் அசாதாரணமான சாதனைகள் படைத்த குழந்தைகளுக்குக் குடியரசுத் தலைவரால் வழங்கப்படும் மதிப்புமிக்க "பிரதமரின் தேசிய பாலர் விருது 2026"-க்கான பரிந்துரைகளை மத்திய அரசு வரவேற்றுள்ளது. விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க 2026 ஜூலை 31 இறுதி நாளாகும்.
துணிச்சல், சமூக சேவை, சுற்றுச்சூழல், விளையாட்டு, கலை & கலாச்சாரம் மற்றும் அறிவியல் & தொழில்நுட்பம் ஆகிய 6 பிரிவுகளில் சிறந்து விளங்கும் 5 முதல் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகள் (31 ஜூலை 2026 நிலவரப்படி) இவ்விருதிற்குத் தகுதியானவர்கள். தகுதியுள்ள குழந்தைகளை எந்தவொரு தனிநபரோ அல்லது நிறுவனமோ பரிந்துரைக்கலாம்; அல்லது சுய நியமனம் மூலம் குழந்தைகளே தங்களை நேரடியாகப் பரிந்துரைத்துக் கொள்ளலாம்.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தங்களின் பெயர், பிறந்த தேதி, கைபேசி எண், மின்னஞ்சல் மற்றும் அடையாள ஆவண விவரங்களை வழங்கி பதிவு செய்ய வேண்டும். பின்னர், நடப்புப் பரிந்துரைகள் பிரிவில் "பிரதமரின் தேசிய பாலர் விருதுகள் 2026" என்பதைத் தேர்ந்தெடுத்து, "விண்ணப்பம் செய்க" என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.
விண்ணப்பப் படிவத்தில் சாதனையை விவரிக்கும் சுருக்கமான கட்டுரை , சான்றளிக்கும் ஆவணங்கள் மற்றும் சமீபத்திய புகைப்படம் ஆகியவற்றை விவரங்களுடன் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2267957®=3&lang=1
Release ID: 2267957
****
TV/EA/SH
(रिलीज़ आईडी: 2268131)
आगंतुक पटल : 13