பிரதமர் அலுவலகம்
குஜராத்தின் சனந்தில் உள்ள கெய்ன்ஸ் செமிகண்டக்டர் ஆலையின் தொடக்க விழாவில் தமது உரையின் முக்கிய அம்சங்களைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்
प्रविष्टि तिथि:
31 MAR 2026 4:54PM by PIB Chennai
குஜராத்தின் சனந்தில் உள்ள கெய்ன்ஸ் டெக்னாலஜி செமிகண்டக்டர் ஆலையின் தொடக்க விழாவின் முக்கிய அம்சங்களைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துகொண்டுள்ளார். மைக்ரான் ஆலையின் உற்பத்தித் தொடக்கத்திற்காக பிப்ரவரி 28 அன்று சனந்தில் தாம் இருந்ததாகவும், சரியாக ஒரு மாதம் கழித்து கெய்ன்ஸ் ஆலையின் இந்த மைல்கல் நிகழ்விற்காக மீண்டும் அங்கு வந்திருப்பதாகவும் குறிப்பிட்ட பிரதமர், இந்தியாவின் செமிகண்டக்டர் பயணத்தின் வேகத்தை அடிக்கோடிட்டுக் காட்டினார். "இது வெறும் தற்செயல் நிகழ்வு அல்ல, இந்தியாவின் செமிகண்டக்டர் சூழலியல் எந்த வேகத்தில் வளர்ந்து வருகிறது என்பதற்கு இதுவே சான்று," என்று திரு மோடி குறிப்பிட்டார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் தொடர் பதிவுகளின் வாயிலாக திரு மோடி குறிப்பிட்டதாவது:
“குஜராத்தின் சனந்தில் கெய்ன்ஸ் செமிகண்டக்டர் ஓஎஸ்ஏடி ஆலை திறக்கப்பட்டிருப்பது, இந்தியாவின் செமிகண்டக்டர் சூழலுக்கு உண்மையிலேயே ஒரு பெருமைக்குரிய தருணமாகும். இது, எதிர்காலத் தொழில்நுட்பங்கள் மற்றும் புதுமைகளில் ஒரு தலைவராக உருவெடுப்பதற்கான இந்தியாவின் முயற்சிகளுக்கு ஊக்கமளிக்கும்.”
“‘இந்தியாவில் உற்பத்தி செய்தல்’ மற்றும் ‘உலகிற்காக உற்பத்தி செய்தல்’ திட்டங்களுக்கு ஒரு உத்வேகம்.”
“இந்தியாவின் செமி கண்டக்டர் தொழில் பல்வேறு மாநிலங்களில் செழித்து வளர்ந்து, எண்ணற்ற இளைஞர்களுக்குப் புதிய வாய்ப்புகளை உருவாக்கி வருகிறது. இந்த முயற்சிகளுக்கு மேலும் வலு சேர்க்கும் வகையில், நாங்கள் தற்போது செமிகண்டக்டர் இயக்கம் 2.0-இல் பணியாற்றி வருகிறோம்.”
“இது இந்தியாவின் தொழில்நுட்ப யுகம்!
தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு, செமிகண்டக்டர் ஆகியவற்றில் நாம் முன்னெடுக்கும் முயற்சிகள் இந்த முழு உலகிற்கும் பயனளிக்கப் போகின்றன.”
***
(Release ID: 2247308)
TV/RB/KR
(रिलीज़ आईडी: 2267952)
आगंतुक पटल : 10
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam