பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஸ்ரீ ராம் ஜன்மபூமி ஆலயத்தில் ஒளிர்ந்த சூரிய திலகத்தை பிரதமர் தரிசித்தார்

இடுகை இடப்பட்ட நாள்: 27 MAR 2026 5:02PM by PIB Chennai

அயோத்தியில் உள்ள ஸ்ரீ ராம் ஜன்மபூமி ஆலயத்தில் பகவான் ராமரின் நெற்றியில் ஒளிர்ந்த சூரிய திலகத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி தரிசித்தார். "பகவான் ஸ்ரீ ராமரின் ஆசிகள் என்றும் நம்மீது நிலைத்திருக்கட்டும்" என்று திரு மோடி குறிப்பிட்டார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் திரு நரேந்திரமோடி பதிவிட்டதாவது:

“இன்று காலை, அயோத்தியில் உள்ள ஸ்ரீ ராம் ஜன்மபூமி ஆலயத்தில் ஒளிர்ந்த சூரிய திலக நிகழ்வைக் கண்டேன். பகவான் ஸ்ரீ ராமரின் ஆசிகள் என்றும் நம்மீது நிலைத்திருக்கட்டும்.”

***

(Release ID: 2246109)

TV/RB/KR


(வெளியீட்டு அடையாள எண்: 2267915) வருகையாளர் எண்ணிக்கை : 22