மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப பாடத்திட்டத்தை சீரமைப்பது தொடர்பாக உயர்நிலை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது
प्रविष्टि तिथि:
28 MAY 2026 4:03PM by PIB Chennai
வளர்ந்து வரும் தொழில்நுட்ப மாற்றங்களுக்கு ஏற்ப மாணவர்களைச் சிறப்பாகத் தயார்படுத்தும் வகையில், செயற்கை நுண்ணறிவுப் பாடத்திட்டத்தை முழுமையாக மாற்றியமைப்பதற்காக மத்திய அரசு தொழில்துறையுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது.
இது தொடர்பாக, மத்திய மின்னணுவியல், தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் தலைமையில், புதுதில்லியில் செயற்கை நுண்ணறிவுப் பாடத்திட்டப் பணிக்குழுவுடன் உயர்நிலைக் கூட்டம் நடைபெற்றது.
இந்தியக் கல்வி நிறுவனங்களில் தற்போதுள்ள இளங்கலைத் தொழில்நுட்பம் (பி.டெக்) கணினி அறிவியல், அது சார்ந்த பாடத்திட்டங்கள் குறித்து இந்தப் பணிக்குழு அடிப்படை ஆய்வை நடத்தியது. இந்த ஆய்வு, தொழில்துறை வல்லுநர்கள், தேசிய மென்பொருள், சேவை நிறுவனங்களின் சங்கத்துடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டது.
இந்தியப் பாடத்திட்டத்தில் செயற்கை நுண்ணறிவு குறித்த கற்பித்தல் முறை விரிவடைந்திருந்தாலும் உள்கட்டமைப்பு, உருவாக்கும் செயற்கை நுண்ணறிவு, இயந்திர கற்றல் செயல்பாடுகள், அடிப்படை மாதிரி உருவாக்கம் போன்ற துறைகளில் உள்ள செய்முறைப் பயிற்சி ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க இடைவெளிகள் இருப்பதைக் கண்டறிந்து அதற்கு தீர்வு காண்பது குறித்து இதில் விவாதிக்கப்பட்டது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2266233®=3&lang=1
***
SS/SV/KR
(रिलीज़ आईडी: 2267802)
आगंतुक पटल : 9
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Bengali
,
Bengali-TR
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Kannada
,
Malayalam