பெட்ரோலியம் மற்றம் இயற்கை எரிவாயு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மேற்கு ஆசியாவில் சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்த அமைச்சகங்களுக்கு இடையேயான அதிகாரிகளின் செய்தியாளர் சந்திப்பு

இடுகை இடப்பட்ட நாள்: 01 JUN 2026 6:02PM by PIB Chennai

மேற்கு ஆசியாவில் நிலவி வரும் சூழ்நிலைகளுக்கு இடையே, எரிபொருள் இருப்பை உறுதி செய்யவும், முக்கியத் துறைகளில் நிலைத்தன்மையைப் பராமரிக்கவும் அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்து, அமைச்சகங்களுக்கு இடையே நடைபெற்ற கூட்டத்தில் விரிவாக விளக்கப்பட்டது. பொருளாதாரப் பாதிப்புகளைத் தவிர்க்கும் வகையில், அவசரகால கடன் உத்தரவாதத் திட்டம் 5.0 (ECLGS 5.0)-க்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இத்திட்டத்தின் மூலம் தகுதியான குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் மற்றும் விமானப் போக்குவரத்துத் துறைக்கு சுமார் ரூ.2,55,000 கோடி கூடுதல் கடன் உதவி வழங்கப்படும்.

உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், 2025-26 ஆம் ஆண்டில் உணவு தானிய உற்பத்தி 3,766 லட்சம் மெட்ரிக் டன்னாகவும், பருப்பு உற்பத்தி 274.09 லட்சம் மெட்ரிக் டன்னாகவும் உயர்ந்து சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை சீராக உள்ளது. சமையல் எண்ணெய் மற்றும் காரீஃப் 2026 பருவத்திற்குத் தேவையான உரங்கள் தட்டுப்பாடின்றி போதுமான அளவில் இருப்பில் உள்ளன.

நாடு முழுவதும் உள்ள சில்லறை விற்பனை நிலையங்களில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு (LPG) விநியோகம் தடையின்றி நடைபெற்று வருகிறது. கடந்த மூன்று நாட்களில் மட்டும் சுமார் 1.22 கோடி சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. கச்சா எண்ணெய் விலை ஏற்றத்தின் சுமையைக் குறைக்கும் விதமாக பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ.10 குறைக்கப்பட்டுள்ளது. எனவே, வதந்திகளை நம்பி எரிபொருளைத் தேவையின்றி பதுக்கி வைக்க வேண்டாம் எனப் பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேற்கு ஆசியப் பகுதியில் கடல்வழி வர்த்தகம் மற்றும் கப்பல் போக்குவரத்துச் சேவைகள் சீராக இயங்கி வருகின்றன. பொதுமக்கள் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும், அரசு வெளியிடும் அதிகாரப்பூர்வ தகவல்களை மட்டுமே பின்பற்ற வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2267611&reg=3&lang=1  

***

TV/SE/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2267687) வருகையாளர் எண்ணிக்கை : 72