விவசாயத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்திய வேளாண்மை துறையில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாக 22 மாநில வேளாண் அமைச்சர்கள் ஒன்றிணைந்தனர்

प्रविष्टि तिथि: 30 MAY 2026 2:33PM by PIB Chennai

இந்திய வேளாண் துறையில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க முதல் நிகழ்வாக, நாட்டின் முதன்மையான வேளாண்மை ஆராய்ச்சி மையங்களில் ஒன்றான புதுதில்லியில் உள்ள புசா வளாகத்தில் மே 28-29 தேதிகளில் நடைபெற்ற இரண்டு நாள் தேசிய கரீஃப் மாநாட்டின் போது, 22 மாநிலங்களின் வேளாண் அமைச்சர்கள் ஒரே மேடையில் ஒன்று கூடினர். ஒருங்கிணைந்த நடவடிக்கை மற்றும் திறமையான செயலாக்கத்தின் மூலம் விவசாயிகளின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கும் விவசாயத் துறையை வலுப்படுத்துவதற்கும் ஒரு கூட்டு உறுதிமொழியுடன் இந்த மாநாடு முடிவடைந்தது.

வழக்கமான ஆய்வுக் கூட்டத்தை விட மேலாக, இந்த மாநாடு உறுதிப்பாடு, ஒருங்கிணைப்பு மற்றும் கள மட்டத்தில் செயல்படுத்துவதற்கான ஒரு தேசிய தளமாக உருவெடுத்தது. மத்திய வேளாண்மை, விவசாயிகள் நலன் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு. சிவராஜ் சிங் சவுகானின் தலைமையில் நடைபெற்ற முதல் நாள் மாநாட்டில், மாநில வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத் துறைகளின் மூத்த அதிகாரிகளிடையே விரிவான விவாதங்கள் நடைபெற்றன. இரண்டாம் நாளில், மாநில வேளாண் அமைச்சர்கள் மாலை வரை தொடர்ந்த ஒரு முன்னோடியான நீண்ட விவாதத்தில் ஈடுபட்டிருந்தபோது, திரு. சவுகான் நிகழ்வுகள் முழுவதும் கலந்துகொண்டார். அவர்கள் ஒருங்கிணைந்து, முக்கிய பிரச்சினைகள் உட்பட ஒரு பொதுவான செயல்திட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2266948&reg=3&lang=1

***

TV/PKV/RJ


(रिलीज़ आईडी: 2267341) आगंतुक पटल : 29
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Punjabi , Gujarati , Telugu , Malayalam