வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்
தெருவோர விற்பனையாளர்களுக்கு அதிகாரமளித்து வரும் பிரதமரின் ஸ்வநிதி திட்டம் ஆறு ஆண்டுகளை நிறைவு செய்தது
प्रविष्टि तिथि:
31 MAY 2026 3:11PM by PIB Chennai
மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்தின் முதன்மை நுண்-கடன் திட்டமான பிரதமரின் தெருவோர விற்பனையாளர் தற்சார்பு நிதி (பிஎம் ஸ்வநிதி), பிணையமில்லா கடன், டிஜிட்டல் உள்ளடக்கம் மற்றும் சமூகப் பாதுகாப்பு ஆகியவற்றின் மூலம் தெருவோர விற்பனையாளர்களுக்கு அதிகாரமளித்து ஆறு ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.
இந்த நிகழ்வைக் கொண்டாடும் விதமாக, மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் திரு. மனோகர் லால், திரிபுரா முதலமைச்சர் திரு. மானிக் சாஹா ஆகியோருடன் இணைந்து, அருணாச்சல பிரதேசம், அசாம், மணிப்பூர், பிஎம் ஸ்வநிதி பயனாளிகளுடன் கலந்துரையாடினார். இந்த நிகழ்வின் போது, அவர்கள் திரிபுராவைச் சேர்ந்த தெருவோர வியாபாரிகளுக்கு கடன் அட்டைகள் மற்றும் கடன் ஒப்புதல் கடிதங்களை வழங்கினர்.
2020 ஜூன் மாதம் தொடங்கப்பட்டதிலிருந்து, பிரதமரின் ஸ்வநிதி திட்டம் தெருவோர வியாபாரிகளுக்கு ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் முயற்சியாக உருவெடுத்துள்ளது. இது முறையான கடன் வசதியை எளிதாக்கியதுடன், பயனாளிகள் தங்கள் வாழ்வாதாரங்களை வலுப்படுத்தவும் விரிவுபடுத்தவும் உதவுகிறது. இந்தத் திட்டம், நாடு முழுவதும் உள்ள தெருவோர வியாபாரிகளுக்குப் பயனளிக்கும் வகையில் ரூ 17,800 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள 1.05 கோடிக்கும் மேற்பட்ட கடன் ஒப்புதல்களை வழங்கியுள்ளது.
வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்களுக்கான மத்திய அமைச்சர் திரு. மனோகர் லால், பிரதமர் திரு. நரேந்திர மோடி, தெருவோர வியாபாரிகளின் கடின உழைப்பு, போராட்டங்கள் மற்றும் பங்களிப்பை அங்கீகரித்து, நகர்ப்புற ஏழைகளை மேம்படுத்துவதும் அவர்களின் வாழ்வாதாரங்களை வலுப்படுத்துவதும் என்ற தொலைநோக்குப் பார்வையுடன் 2020-ல் இந்தத் திட்டத்தைத் தொடங்கினார் என்று கூறினார்.
இந்தத் திட்டத்தின் நோக்கம் பிணையம் இல்லாத கடன்களை வழங்குவது மட்டுமல்ல, மரியாதை, நம்பிக்கை ஆகியவற்றை உறுதி செய்வதும் ஆகும் என்று அவர் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2267218®=3&lang=1
***
TV/PKV/RJ
(रिलीज़ आईडी: 2267330)
आगंतुक पटल : 69