குடியரசுத் தலைவர் செயலகம்
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு குடியரசுத் தலைவர் வாழ்த்து
प्रविष्टि तिथि:
27 MAY 2026 6:39PM by PIB Chennai
குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு, ஈத்-உஸ்-ஜுஹா (பக்ரீத்) பண்டிகையை முன்னிட்டு மக்களுக்கு தமது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
அதுகுறித்துக் குடியரசுத் தலைவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது: “ஈத்-உஸ்-ஜுஹா பண்டிகையை முன்னிட்டு, சக குடிமக்கள், வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள், குறிப்பாக நமது முஸ்லிம் சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளையும் நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தப் பண்டிகை தியாகம், தன்னலமற்ற குணம் ஆகியவற்றின் அடையாளச் சின்னமாகும். இது மனிதகுலத்திற்கு, குறிப்பாக நலிந்தவர்களுக்குச் சேவை செய்ய நம்மைத் தூண்டுகிறது. இந்த நல்ல தருணத்தில், சமூகத்தில் அன்பையும் நல்லிணக்கத்தையும் மேம்படுத்துவதற்கான நமது உறுதியை வலுப்படுத்துவோம்."
***
TV/PLM/SE
(रिलीज़ आईडी: 2266106)
आगंतुक पटल : 53
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam