வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்தியா-கனடா இடையே விரிவான பொருளாதார கூட்டாண்மைக்கான ஒப்பந்தம் விரைவில் இறுதி செய்யப்படும்: மத்திய அமைச்சர் திரு பியூஷ் கோயல்

இடுகை இடப்பட்ட நாள்: 27 MAY 2026 10:42AM by PIB Chennai

மத்திய வர்த்தகம், தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல், கனடா நாட்டின் டொராண்டோ நகரில் அந்நாட்டு வர்த்தக அமைச்சர் திரு மணீந்தர் சித்துவையும், முன்னணி வணிக நிறுவனங்களின் தலைவர்களையும் சந்தித்து உயர்மட்ட ஆலோசனை நடத்தினார். இந்த நிகழ்வின்போது, இரு நாடுகளுக்கும் இடையேயான இருதரப்பு வர்த்தகத்தை 5,000 கோடி அமெரிக்க டாலர்களாக உயர்த்தும் இலக்கை எட்டுவதற்கும், விரிவான பொருளாதாரக் கூட்டாண்மை ஒப்பந்தம் (சிஇபிஏ) தொடர்பான பேச்சுவார்த்தைகளை துரிதப்படுத்துவதற்கும் இருநாட்டு அமைச்சர்களும் தங்களின் கூட்டு உறுதிப்பாட்டை தெரிவித்தனர்.

டொராண்டோவில் நடைபெற்ற 'இந்தியா-கனடா இணைப்பை உருவாக்குதல்', 'முதலீட்டாளர்கள் வட்டமேஜை' ஆகிய மாநாடுகளில் உரையாற்றிய அமைச்சர், இந்தியாவின் முக்கியத் துறைகளில் உள்ள முதலீட்டு வாய்ப்புகளைக் எடுத்துரைத்து, இந்தியாவில் முதலீடு செய்ய கனடா முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்தார். உள்கட்டமைப்பு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, தொழில்நுட்ப கூட்டுறவு, கனிம வளங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரு நாடுகளும் இணைந்து செயல்பட பல்வேறு வாய்ப்புகள் உள்ளதாகக் குறிப்பிட்டார்.

பிராம்ப்டன் நகரில் இந்திய வம்சாவளியினரிடையே உரையாற்றிய அமைச்சர் திரு பியூஷ் கோயல், இரு நாடுகளின் வணிக, கலாச்சார உறவுகளை வலுப்படுத்துவதில் அவர்களின் பங்குக்கு பாராட்டு தெரிவித்தார். முன்னதாக, ஹம்பர் பே பூங்காவில் உள்ள கனிஷ்கா நினைவிடத்திற்குச் சென்ற அமைச்சர், ஏர் இந்தியா 182 விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு மரியாதை செலுத்தினார். அமைச்சரின் இந்த அரசுமுறைப் பயணம் இருநாட்டுப் பொருளாதார உறவில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2265710&reg=3&lang=1

 

***

SS/PD/KR


(வெளியீட்டு அடையாள எண்: 2265782) வருகையாளர் எண்ணிக்கை : 13
இந்த வெளியீட்டை படிக்க: Telugu , Malayalam , English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Bengali-TR , Gujarati