குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

காதி, கிராம தொழில் பொருட்களின் விற்பனை ரூ.1.87 லட்சம் கோடியைக் கடந்து சாதனை படைத்துள்ளது

இடுகை இடப்பட்ட நாள்: 26 MAY 2026 3:09PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடியின் வழிகாட்டுதலின் பேரில், காதி மற்றும் கிராம தொழில்கள் துறை, கடந்த 12 ஆண்டுகளில் மாபெரும் வளர்ச்சி பெற்று வந்துள்ளது. 2025-26-ம் நிதியாண்டில், காதி மற்றும் கிராம தொழில் பொருட்களின் விற்பனை ரூ.1,87,105 கோடி என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க அளவை எட்டியுள்ளது. இது முன்னெப்போதும் இல்லாத வகையில் உயர் அளவிலான விற்பனையாகத் திகழ்வதுடன், நாட்டின் கிராமப்புறப் பகுதிகளில் அதிகரித்து வரும் தொழில்முனைவு, தற்சார்பு, பொருளாதார அதிகாரமயமாக்கல் ஆகியவற்றிற்கு வலுவான  சான்றாகவும் விளங்குகிறது. தற்சார்பு இந்தியா, உள்ளூர் தயாரிப்புகளுக்கு ஆதரவு அளிப்பது, உள்நாட்டு தயாரிப்புகளுக்கு உலகளவிலான சந்தை போன்ற தேசிய அளவிலான முன்முயற்சிகள் உத்வேகம் பெற்று, காதி நிறுவனத்தின் தயாரிப்புகள்  தற்போது பாரம்பரியப் பொருளாக மட்டுமின்றி, புதிய இந்தியாவின் தற்சார்பு, உள்நாட்டுப் பெருமை, கிராமப்புற வளமையின் முக்கிய அடையாளமாக உருவெடுத்துள்ளது. உற்பத்தி, சந்தைப்படுத்தல், வேலைவாய்ப்பு உருவாக்கம் ஆகிய துறைகளில், புதிய அளவுகோல்களை அமைப்பதன் மூலம், காதி மற்றும் கிராம தொழில்கள் துறை நாட்டின் கிராமப்புறப் பொருளாதாரத்திற்குப் புதிய உத்வேகத்தை அளிப்பதுடன், சிறந்த வழிகாட்டியாகவும் உள்ளது.

புது தில்லி, ராஜ்காட்டில் உள்ள 'காந்தி தர்ஷன்' வளாகத்தில் அமைந்துள்ள காதி மற்றும் கிராம தொழில்கள் ஆணையத்தின் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில்,  2025-26-ம் நிதியாண்டிற்கான தற்காலிகப் புள்ளிவிவரங்களை, ஆணையத்தின் தலைவர் திரு மனோஜ் குமார் வெளியிட்டார். இந்நிகழ்சியில் உரையாற்றிய அவர், உற்பத்தி, விற்பனை, வேலைவாய்ப்பு உருவாக்கம் ஆகிய துறைகளில், ஆணையம் புதிய சாதனைகளைப் படைத்துள்ளதாகத் தெரிவித்தார். காதி மற்றும் கிராம தொழில் ஆணையத்தின் இந்தச் சிறப்பான செயல்பாடு, வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான இலக்கை விரைவில் எட்டுவதற்கு உதவிடுவதுடன்உலகின் முன்னணி பொருளாதார நாடுகளில் ஒன்றாக இந்தியாவை நிலைநிறுத்துவதிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளித்து வருவதாக அவர் தெரிவித்தார். இந்தச் சாதனைக்கு, பிரதமர் திரு நரேந்திர மோடியின் சிறப்பான வழிகாட்டுதல், மகாத்மா காந்தியிடமிருந்து பெறப்பட்ட உத்வேகம், நாட்டின் தொலைதூர கிராமப்புறங்களில் உழைக்கும் லட்சக்கணக்கான கைவினைஞர்களின் கடின உழைப்பு ஆகியவையே காரணம் என்று திரு மனோஜ் குமார் குறிப்பிட்டார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2265369&reg=3&lang=1

***

SS/SV/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2265592) வருகையாளர் எண்ணிக்கை : 18
இந்த வெளியீட்டை படிக்க: Telugu , Kannada , Bengali , English , Urdu , हिन्दी , Gujarati