பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான உள்ளடக்கிய வளர்ச்சி, தொலைநோக்குப் பார்வை குறித்த கட்டுரையைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்

இடுகை இடப்பட்ட நாள்: 26 MAY 2026 1:10PM by PIB Chennai

குடியரசு துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் எழுதியுள்ள கட்டுரையை பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.

அமிர்தகாலத்தில் இந்தியா முன்னேறிச் செல்லும் சூழலில் நாட்டு மக்களுக்கு குறிப்பாக, மகளிர் சக்தி, இளைஞர்கள், விவசாயிகள் ஆகியோர் பயன்பெறும் அரசின் முன்முயற்சிகளை இக்கட்டுரை பிரதிபலிக்கிறது. சுவாமி விவேகானந்தா, திருவள்ளுவர், சுப்பிரமணிய  பாரதி ஆகியோரிடமிருந்து உத்வேகம் பெற்று 2047-ம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்க அனைவரும் ஒருங்கிணைந்து பாடுபட வேண்டும் என்று இக்கட்டுரை அழைப்பு விடுக்கிறது.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டிருப்பதாவது:

“அமிர்த காலத்தில் இந்தியா முன்னேறிச் செல்லும் சூழலில், குடியரசு துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன், நாட்டு மக்கள், குறிப்பாக மகளிர் சக்தி, இளைஞர்கள், விவசாயிகள் ஆகியோர்  பயனடையும் அரசின் முன்முயற்சிகள் குறித்து எடுத்துரைத்துள்ளார். சுவாமி விவேகானந்தா, திருவள்ளுவர், சுப்பிரமணிய பாரதி ஆகியோரிடமிருந்து உத்வேகம் பெற்று 2047-ம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்க அனைவரும் ஒருங்கிணைந்து பாடுபட வேண்டும் என்று அவர் அழைப்பு விடுக்கிறார்.” 

***

(Release ID: 2265327

SS/IR/KPG/KR


(வெளியீட்டு அடையாள எண்: 2265471) வருகையாளர் எண்ணிக்கை : 6