பெட்ரோலியம் மற்றம் இயற்கை எரிவாயு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பிஎன்ஜி இணைப்புகளைத் தேர்ந்தெடுக்கும் நுகர்வோருக்கு வசதியாக, எல்பிஜி கட்டுப்பாட்டு உத்தரவில் திருத்தம் செய்தது மத்திய அரசு

இடுகை இடப்பட்ட நாள்: 25 MAY 2026 6:31PM by PIB Chennai

எல்பிஜி திரவ பெட்ரோலிய எரிவாயு (வழங்கல் மற்றும் விநியோக ஒழுங்குமுறை) திருத்த ஆணை, 2026- மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது. குழாய்வழி இயற்கை எரிவாயு (பிஎன்ஜி) இணைப்புகளைப் பெறும் வீட்டு உபயோக எல்பிஜி நுகர்வோருக்குக் கூடுதல் தளர்வுகளையும் வசதிகளையும் வழங்கும் நோக்கத்துடன் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

திருத்தப்பட்ட விதிகளின்படி, பிஎன்ஜி இணைப்புகளையும் கொண்டுள்ள எல்பிஜி நுகர்வோருக்குப் பின்வரும் வாய்ப்புகள் வழங்கப்படும்:

பிஎன்ஜி இணைப்பைப் பெற்ற 30 நாட்களுக்குள் எல்பிஜி இணைப்பைத் துண்டிக்க நுகர்வோர் விண்ணப்பிக்கலாம்; அல்லது

பிஎன்ஜி சேவை இல்லாத பகுதியில், எதிர்காலத்தில் எல்பிஜி இணைப்பை மீண்டும் பெறுவதற்காக பரிமாற்றச் சீட்டைப் பெறலாம்.

இந்தத் திருத்தம், பிற்காலத்தில் குழாய்வழி இயற்கை எரிவாயு உள்கட்டமைப்பு சாத்தியமில்லாத பகுதிகளுக்குக் குடிபெயரக்கூடிய நுகர்வோருக்குக் குறிப்பிடத்தக்க நிவாரணத்தையும் வசதியையும் வழங்குகிறது.

இந்த விதி, குறிப்பாக இடமாற்றம் செய்யப்படும் பணியாளர்கள், புலம்பெயர்ந்த குடும்பங்கள், வாடகைதாரர்கள், மாணவர்கள் மற்றும்/அல்லது குழாய்வழி இயற்கை எரிவாயு வசதி அல்லாத பகுதிகளுக்குக் குடிபெயரும் குடும்பங்களுக்குப் பயனளிக்கிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2265063&reg=3&lang=1&v=3    

***

TV/RB/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2265197) வருகையாளர் எண்ணிக்கை : 74