மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
நீட் மறுதேர்வை சுமூகமாகவும் பாதுகாப்பாகவும் நடத்த மாநில அரசுகள் ஒத்துழைக்க வேண்டும்: மத்திய கல்வி அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான்
प्रविष्टि तिथि:
25 MAY 2026 6:39PM by PIB Chennai
வரும் ஜூன் 21, 2026 அன்று நடைபெறவுள்ள இளநிலை நீட் மறுதேர்வை சுமூகமாகவும், நேர்மையாகவும், வெற்றிகரமாகவும் நடத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு அனைத்து மாநில முதலமைச்சர்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் துணைநிலை ஆளுநர்களுக்கு மத்திய கல்வி அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் கடிதம் எழுதியுள்ளார். தற்போது நிலவி வரும் கடுமையான வெயில் மற்றும் வெப்ப அலையைக் கருத்தில் கொண்டு, தேர்வெழுதும் மாணவர்களின் வசதிக்காகவும் நலனுக்காகவும் தேர்வு மையங்களில் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் உறுதி செய்யுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
மத்திய அமைச்சர் தமது கடிதத்தில், தேர்வு மையங்களாகச் செயல்படும் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பிற கல்வி நிறுவனங்களில் பாதுகாப்பான குடிநீர், போதிய இருக்கை வசதிகள், மின்விசிறிகள்/கூலர்கள், தூய்மையான கழிவறைகள், நிழற்கூரையுடன் கூடிய காத்திருப்புப் பகுதிகள், தடையற்ற மின்சாரம் ஆகிய அத்தியாவசிய வசதிகள் இருப்பதை உறுதி செய்ய மாவட்ட அதிகாரிகளுக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்குமாறு மாநில அரசுகளைக் கோரியுள்ளார்.
மாணவர்களின் நலனுக்கு முக்கியத்துவம் அளித்து, தேர்வு நாளன்று மாணவர்களுக்கான போக்குவரத்து வசதிகளை மாநில அரசுகள் செய்து தர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். இந்த நீட் மறுதேர்வு முறையாகவும், வெளிப்படையாகவும் நடப்பதை உறுதி செய்ய அனைத்து மாநிலங்களும் தங்களின் முழு ஒத்துழைப்பை வழங்கும் என அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2265073®=3&lang=1
***
TV/PD/RJ
(रिलीज़ आईडी: 2265194)
आगंतुक पटल : 59