உள்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

புதுதில்லியில் பகவான் பிர்சா முண்டாவின் 150-வது பிறந்ததினத்தையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பழங்குடியினரின் கலாச்சார திருவிழாவில் மத்திய அமைச்சர் திரு அமித் ஷா உரையாற்றினார்

இடுகை இடப்பட்ட நாள்: 24 MAY 2026 9:49PM by PIB Chennai

புதுதில்லியில் பகவான் பிர்சா முண்டாவின் 150-வது பிறந்ததினத்தையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பழங்குடியினரின் கலாச்சார திருவிழாவில் மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு அமித் ஷா உரையாற்றினார்

இந்த திருவிழா மேலும் பல ஆண்டுகளுக்கு பழங்குடியினச் சமூகங்களின் மாபெரும் திருவிழாவாக நினைவுகூரப்படும் என்று கூறினார். பகவான் பிர்சா முண்டாவிற்குப் பிறகு, நாடு முழுவதையும் ஒன்றிணைக்கும் முதலாவது பழங்குடியின இயக்கம் இதுவே என்று அவர் குறிப்பிட்டார். ‘உல்குலான்’ இயக்கம் ஆங்கிலேயர்களை பணிய வைத்ததைச் சுட்டிக்காட்டிய அவர், அக்காலத்தில் தகவல் தொடர்பு வசதிகள் ஏதும் இல்லாத நிலையிலும், ஜார்கண்ட் முதல் குஜராத் வரையிலும், நாடு முழுவதும், நமது நம்பிக்கையே உண்மையான நம்பிக்கை; நமது காடுகளுக்குள் யாரும் அத்துமீறி நுழைய முடியாது என்ற செய்தியைப் பரப்புவதில் பகவான் பிர்சா முண்டா வெற்றி பெற்றார் என்று குறிப்பிட்டார். நீர், காடுகள், மலைகள் ஆகியவை நமது பழங்குடியினச் சகோதர சகோதரிகளுக்கு நம்பிக்கையின் மையங்களாகவும், வாழ்வாதாரத்தின் ஆதாரங்களாகவும், அவர்களின் அடையாளம் மற்றும் கலாச்சாரத்தைப் பாதுகாக்கும் அசைக்க முடியாத கோட்டையாகவும் திகழ்வதாக அவர் கூறினார். தற்போதைய காலகட்டத்தில், பழங்குடியினச் சமூகங்களால் உருவாக்கப்பட்டதே மிகச்சிறந்த நீடித்த வளர்ச்சி மாதிரி என்றும் அவர் கூறினார்.

அனைத்து பழங்குடியின சமூகங்களும் 'வேற்றுமையில் ஒற்றுமை' மற்றும் 'ஒற்றுமையில் வேற்றுமை' ஆகிய கோட்பாடுகளுக்குச் சிறந்த எடுத்துக்காட்டுகளாகத் திகழ்வதாக திரு அமித் ஷா கூறினார். நமது அரசியலமைப்பை உருவாக்கியவர்கள்,  ஒவ்வொரு தனிநபரும் தங்கள் நம்பிக்கையின் அடிப்படையில் கண்ணியத்துடன் வாழ்வதற்கான உரிமையை வழங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டார். பேராசை, ஆசையூட்டுதல் அல்லது கட்டாயப்படுத்துதல் ஆகியவற்றின் மூலம், எவரையும் மதமாற்றத்திற்கு உட்படுத்தவோ அல்லது அதற்குத் தூண்டவோ எவருக்கும் உரிமை இல்லை என்று அவர் வலியுறுத்தினார். பழங்குடியின சமூகங்கள் தற்போது தங்கள் நம்பிக்கையைப் பாதுகாப்பதில் உறுதியேற்றால், அந்த உறுதிப்பாடு நம்மை நமது கலாச்சாரம் மற்றும் நாட்டுடன் பிணைப்புடன் வைத்திருக்கும் என்று அவர் கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2264860&reg=3&lang=1

***

SS/IR/LDN/PD


(வெளியீட்டு அடையாள எண்: 2264942) வருகையாளர் எண்ணிக்கை : 6
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Marathi , Manipuri , Assamese , Bengali , Bengali-TR , Punjabi , Gujarati