உள்துறை அமைச்சகம்
எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு வழங்கப்படும் கௌரவம், நாட்டின் மீதான வலுவான நம்பிக்கை, கடமையுணர்வு, முழுமையான ஈடுபாட்டின் அடையாளமாகும் - மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா
இடுகை இடப்பட்ட நாள்:
22 MAY 2026 5:26PM by PIB Chennai
எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு வழங்கப்படும் கௌரவம், நாட்டின் மீதான உறுதியான அர்ப்பணிப்பு, கடமையுணர்வு, முழுமையான தேசபக்தி ஆகியவற்றின் அடையாளமாக உள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா கூறினார்.
மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு அமித் ஷா புது தில்லியில் இன்று நடைபெற்ற எல்லைப் பாதுகாப்புப் படையினரின் கௌரவிப்பு விழா மற்றும் ருஸ்தம்ஜி நினைவு சொற்பொழிவில் கலந்துகொண்டு உரையாற்றினார்.
1965-ம் ஆண்டு நடைபெற்ற போருக்குப் பிறகு, எல்லைப் பாதுகாப்பில் உள்ள குறைபாடுகள் குறித்த விரிவான மதிப்பீடு, அனைத்து சூழல்களிலும் நாட்டின் எல்லைகளைப் பாதுகாக்க ஒரு பிரத்யேகப் படை தேவை என்ற உணர்வுக்கு வழிவகுத்தது என்று அவர் கூறினார்.
அந்த நேரத்தில் பத்ம விபூஷன் கே.எஃப். ருஸ்தம்ஜி தலைமையில் எல்லைப் பாதுகாப்புப் படை நிறுவப்பட்டது என்றும், இந்த படை நாட்டின் எல்லைப் பகுதிகளின் பாதுகாப்பை உறுதி செய்து வருகிறது என்றும் அவர்தெரிவித்தார்.
கே.எஃப். ருஸ்தம்ஜி அமைத்த வலுவான அடித்தளம், தேசியப் பாதுகாப்புத் துறையில் ஒரு நிறுவனத்தை உருவாக்க எல்லைப் பாதுகாப்புப் படைக்கு வழிவகுத்துள்ளது என்றும், இது நாட்டிற்குப் பெருமை சேர்த்து வருகிறது என்றும் திரு அமித் ஷா கூறினார்.
எல்லைப் பாதுகாப்புப் படையின் தலைமை இயக்குநர் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2264198®=3&lang=1
***
TV/SV/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2264685)
வருகையாளர் எண்ணிக்கை : 8