நிதி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

வடகிழக்குப் பிராந்தியத்தில் 60,000 கிலோ வெளிநாட்டிலிருந்து கடத்தப்பட்ட பாக்குகளை வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் பறிமுதல்

இடுகை இடப்பட்ட நாள்: 22 MAY 2026 1:43PM by PIB Chennai

வடகிழக்குப் பிராந்தியத்தில் வருவாய் புலனாய்வு இயக்குநரகத்தில் குவஹாத்தி மண்டல அதிகாரிகள் மேற்கண்ட இரண்டு சோதனை நடவடிக்கைகளின் போது சட்டவிரோதமாக கடத்தப்பட்ட 60,000 கிலோ எடையுள்ள வெளிநாட்டு பாக்குகளை பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக கிடைத்த உளவுத்துறை தகவலின் அடிப்படையில், மிசோரம் மற்றும் அசாம் மாநிலங்களில் வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது இந்த பாக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக நடத்தப்பட்ட முதல் கட்ட விசாரணையின் போது மியான்மர் – மிசோரம் எல்லை வழியாக மியான்மரிலிருந்து இந்தியாவுக்கு வெளிநாட்டு பாக்கு வகைகள் சட்டவிரோதமாக கடத்தி வந்தது தெரியவந்துள்ளது.

இந்தச் சோதனை நடவடிக்கைகளுக்கு அசாம் ரைஃபிள்ஸ் படைப்பிரிவின் 38-வது பெட்டாலியன் உதவியது. இந்தக் கடத்தல் தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

அண்டை நாட்டிலிருந்து சட்டவிரோதமாக பாக்குகள் கடத்தப்படுவது உள்நாட்டுப் பாக்கு விவசாயிகளுக்கு கடும் பொருளாதார இழப்பை ஏற்படுத்துவதுடன் எல்லைப் பகுதிகளில் பொருளாதார பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலையும் ஏற்படுத்தி வருகிறது.

***

(Release ID: 2264034)

SS/SV/KPG/PD


(வெளியீட்டு அடையாள எண்: 2264219) வருகையாளர் எண்ணிக்கை : 15