பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

நீர் நிர்வாகத்திற்கு இந்தியாவின் விரிவான தொலைநோக்குப் பார்வையை எடுத்துரைக்கும் ஒரு கட்டுரையைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்

இடுகை இடப்பட்ட நாள்: 21 MAR 2026 4:29PM by PIB Chennai

நீர்ப் பாதுகாப்பு மிக்க எதிர்காலத்தை அடைவதற்கு இந்தியாவின் விரிவான தொலைநோக்குப் பார்வையைக்  கோடிட்டுக் காட்டும், மத்திய ஜல் சக்தி துறை அமைச்சர் திரு சி.ஆர். பாட்டீல் எழுதிய கட்டுரை ஒன்றைப்  பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.

இந்தியாவின் நீர் நிர்வாக அணுகுமுறை என்பது, பாதுகாப்பு, நீடித்தப் பயன்பாடு, சமூகத்தின் தீவிர ஈடுபாடு ஆகியவற்றை அடித்தளமாகக் கொண்டுள்ளதை இக்கட்டுரை எடுத்துக்காட்டுகிறது. ஜல் சக்தி அமைச்சகத்தின் செயலாக்கம், நாடு முழுவதும் முழுமையான, ஒருங்கிணைந்த நீர் மேலாண்மையை நோக்கிய ஒரு தீர்க்கமான மாற்றத்தை எவ்வாறு ஏற்படுத்தியது என்பதையும் இது அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது:

 "நீர்ப் பாதுகாப்பு, நீடித்தப் பயன்பாடு, சமூகப் பங்கேற்பு ஆகியவை ஒன்றிணைந்து, நீர்ப் பாதுகாப்பு மிக்க எதிர்காலத்தை நோக்கிய பயணத்தை வலுப்படுத்தும் இந்தியாவின் நீர் நிர்வாகத்திற்கான விரிவான தொலைநோக்குப் பார்வையை மத்திய அமைச்சர் திரு சி.ஆர். பாட்டீல் இந்தக் கட்டுரையில் எடுத்துரைக்கிறார்.

ஜல் சக்தி அமைச்சகத்தின் செயலாக்கம், நாட்டில் முழுமையான நீர் மேலாண்மையை நோக்கிய ஒரு தீர்க்கமான மாற்றத்தைக் குறித்தது என்பதையும் அவர் அடிக்கோடிட்டுக் காட்டுகிறார்."

***

(Release ID 2243363)

SS/SMB/KR


(வெளியீட்டு அடையாள எண்: 2263699) வருகையாளர் எண்ணிக்கை : 39