பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

இந்தியாவின் எரிசக்தி மாற்றம் குறித்த கட்டுரையைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்

प्रविष्टि तिथि: 20 MAR 2026 1:18PM by PIB Chennai

மத்திய இணையமைச்சர் திரு ஸ்ரீபத் நாயக் எழுதிய கட்டுரை ஒன்றை பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார். இந்தக் கட்டுரை இந்தியாவின் எரிசக்தி துறையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தக்க பயணத்தை விரிவாக விளக்குகிறது.

இந்தியாவின் எரிசக்தி மாற்றமானது, நடைமுறைக்கேற்ற கொள்கை வடிவமைப்பு மற்றும் தற்சார்பை நோக்கிய தெளிவான முன்னெடுப்புகளால் உந்தப்படுவதை இக்கட்டுரை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

இது குறித்து பிரதமர் தனது  சமூக  ஊடக 'எக்ஸ்' தளத்தில் பதிவிட்டுள்ளதாவது:

"இந்தியாவின் எரிசக்தி மாற்றம், நடைமுறைக்கேற்ற கொள்கை மற்றும் சுயசார்பு பாரதத்தை நோக்கிய தெளிவான உந்துதலால் இயக்கப்படுவதை மத்திய இணை அமைச்சர் திரு ஸ்ரீபத் நாயக் சுட்டிக்காட்டியுள்ளார்.

மின்மயமாக்கல், தூய்மையான எரிசக்தி மற்றும் உற்பத்தி ஆகியவற்றில் வலுவான கவனம் செலுத்துவதன் மூலம், உலகளாவிய எரிசக்தி நிலப்பரப்பில் ஒரு தீர்க்கமான அத்தியாயத்தை இந்தியா வடிவமைத்து வருகிறது.

அனைவரும் அவசியம் வாசிக்கவும்!"

----

(Release ID: 2242879)

SS/VK/KR


(रिलीज़ आईडी: 2263676) आगंतुक पटल : 14
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Bengali , Bengali-TR , Assamese , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam